கோச்சடையான், தி 100 ஃபூட் ஜார்னி, மில்லியன் டொலர் ஆர்ம்
படங்களுக்கான சிறந்த இசை அமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர்
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெப்ரவரி 20-ம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்லில் நடக்க உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் ஜனவரி 15ம் திகதி அறிவிக்கப்பட
உள்ளது. இதில் சிறந்த இசை அமைப்புக்காக 114 படங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன
அதில் ஒன்று ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் மோஷன் கேப்சர்
அனிமேஷனில் வெளியான ‘கோச்சடையான்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும்
பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் தி 100 பூட் ஜார்னி, மற்றும் மில்லியன் டொலர் ஆர்ம் உள்ளிட்ட
படங்களுக்காகவும் சிறந்த இசையமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment