• Latest News

    December 14, 2014

    முஸ்லிம் காங்கிரஸ் வெங்காயம் உரிக்கிறது: முஜிபுர் ரஹ்மான் நையாண்டி

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடிக்கடி உயர்பீடத்தை கூட்டி வெங்காயத்தையே உரிக்கிறது என மேல் மாகாண சபை உறுப்பினர் நையாண்டி செய்துள்ளார்.

    எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிச்சார கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அதிகமான கிழக்கு மாகாண மக்கள் தமக்கு விடிவு கிடைக்க வேண்டும் என தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கின்றனர்.

    ஆனால் அவர்கள் இன்றுவரை மக்களை ஏமாற்றியே வருகின்றனர். இன்று முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர்.

    ஆனால் மு.கா. மக்களின் உணர்வகளை புரிந்துகொள்ளாது, தமது சொகுசு வாழ்க்கையையும் பதவிகளையும் மட்டும் எதிர்ப்பார்த்து மஹிந்த அரசாங்கத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

    இவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளை புறந்தள்ளிவைத்துவிட்டு தமது சுய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கட்சியை வழி நடத்துகின்றனர்.

    சிலரின் சுய நலத்தின் காரணமாக இன்று முஸ்லிம் காங்கிரஸினால் ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளை எடுத்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.

    ஜனாதிபதி தேர்தல் ஒன்று எதிர்ப்பார்க்கப்பட்டபோதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் பல தடவை கூட்டப்பட்டது.

    ஆனால் அவர்களால் தீக்கமான முடிவு எடுக்க முடியாதிருப்பது முஸ்லிம்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வெங்காயத்தை உரிக்க உரிக்க எதுவும் கிடைப்பதில்லை. அதேபோல் மு.கா.வும் அடிக்கடி கூடுகிறது. ஆனால் அவர்களிடம் முடிவு தீர்க்கமான முடிவு இல்லை. இதனால் நாம் கவலையடைய வேண்டியுள்ளது.

    18 அரசியல் திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் நாட்டுக்கே துரோகமளித்தது.

    பின்னர் தேர்தல் காலங்களில் மட்டும் நல்ல பிள்ளை போல் மக்களிடம் மன்னிப்பு கோரியது. அவர்கள் செய்தது எமது அடுத்த சந்ததிக்கு செய்த துரோகமாகும்.

    இந்த பாவத்திலிருந்து மீளுவதற்கு தற்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. பொது எதிரணியினர் சர்வதிகார ஜனாதிபதி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

    மஹிந்தவை தேற்கடிக்க அவர்கள் வெ ளியில் வரவேண்டும். இதனால் வரலாற்று துரோகத்திலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.

    பயங்கரவாதம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும் பயத்துடன் வாழ்தனர்.

    அப்போது கிழக்கில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின்போது நாம் தென்பகுதியிலிருந்து குரல்கொடுத்தோம்.

    இன்று தெற்கில் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இப்போது அவர்களுக்கு உதவ கிழக்கு முஸ்லிம்கள் அணி திரளவேண்ம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

    ஏறாவூர் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் காங்கிரஸ் வெங்காயம் உரிக்கிறது: முஜிபுர் ரஹ்மான் நையாண்டி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top