இப்னு செய்யத்:
மக்களின் உணர்ச்சிகளுக்கு அள்ளுப்பட்டு போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அறிவுபூர்மாக சிந்திக்கவில்லை என இங்கு தெரிவிக்கப்பட்டது. மக்கள் அறிவுபூர்மாக சிந்திக்கின்றார்களா அல்லது சிந்திக்காது இருக்கின்றார்கள் என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.ஐ.றியாஸ் கண்டியில்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மு.காவின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட
முக்கியத்துவமிக்க கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்;
இன்று மக்களிடம் இன்று காணப்படுகின்ற உணர்வு ரீதியானதொரு தாக்கத்தை அவர்களிடம் ஊட்டியவர்கள் யார்? கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது நாம் எதனைக் கூறி வாக்குகளைப் பெற்றோம் என்பதனை யாரும் மறக்க முடியாது. அன்று வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கையாளப்பட்ட விடயம், இன்று உணர்வுபூர்வமாக பெரும்பான்மையான முஸ்லிம்களை சிந்திக்க வைத்துள்ளது. இந்த இடத்தில் நாம் எடுக்கின்ற முடிவு மக்கள் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்பதனை விடவும், நாம் கட்சியின் செல்வாக்கை இழக்காத வகையில் அறிவுபூர்மான முடிவினை எடுக்க வேண்டும். SA

0 comments:
Post a Comment