• Latest News

    January 28, 2015

    தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

    எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என தெரியவருகிறது.
     
    இவர்களில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, நிஷாந்த முத்துஹெட்டிகம, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அருந்திக்க பெர்ணான்டோ, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), துமிந்த சில்வா, ரோஹித்த அபேகுணவர்தன, சரண குணவர்தன ஆகியோர் முக்கியமான நபர்கள் என கூறப்படுகிறது.

    இவர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் உட்பட ஏனைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரியவருகிறது.

    இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னிடம் உறுதியளித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

    இது பற்றி அறிந்து கொண்ட ஏனைய மோசடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பின்னால் திரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top