• Latest News

    January 28, 2015

    மைத்திரியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவோம்: எதிர்க்கட்சித் தலைவர்

    இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கலப்பான உணர்வுகளுடன் புதிய கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டிய பதவி என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

    இதனடிப்படையில் செயற்படும் போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    கொழும்பு சேர் மார்க்ஸ் பெர்ணாந்து மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    நான் அரசியல் பாத்திரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலமே உருவாகினேன். எனது உடலில் ஓடுவது அந்த இரத்தம். இதனால், கட்சியை பாதுகாப்பதற்காகவே நான் முன்னுரிமை வழங்குவேன்.

    கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதால், கட்சியினை மேலும் வலுப்படுத்த அது உதவியாக அமையும். ஜனாதிபதி கட்சியின் தலைமை பதவியை ஏற்று இரண்டாக பிளவுபடுவதை தடுத்து காப்பாற்றினார்.

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கம். இதற்காக அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும்.

    அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெரும் சேவைகளை செய்துள்ளார். அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் கட்டாயமாக நினைவுக்கூற வேண்டும்.

    நாங்கள் அங்கம் வகித்த அரசாங்கத்தில் குறைபாடுகள் பல இருந்தன என்பதை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவோம்: எதிர்க்கட்சித் தலைவர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top