இன்று புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம், முன்னைய அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை செல்லுபடியற்றதாக மாட்டாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மகாநாம ஹேவா தெரிவித்தார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியில் இது தொடர்பாக இன்று காலை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான இடைக்கால வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்கனவேயுள்ள வரவு செலவுத் திட்டத்தில் குறைநிரப்பும் ஒன்றாகவே இது முன்வைக்கப்படுகின்றது. இது புதிய ஒரு வரவு செலவுத் திட்டம் அல்ல.
இந்த வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தேவையெனவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:
Post a Comment