எஸ்.அஷ்ரப்கான்:
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்டில் நுாலகம் மற்றும் ஜிம் சென்டர் திறப்பு விழா கடற்கரை வீதியில் அமைந்துள்ள பௌஸி மைதானத்திற்கு முன்பாக பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழக காரியாலய கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை (30) பி.ப. 3 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ்.முஹம்மது கான் அவர்களின் வழிநடாத்தலில் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழாவிற்கு சாய்ந்தமருது-02 இல்ஹாம் இளைஞர் கழகம், சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம், சாய்ந்தமருது பௌஸி விளையாட்டுக்கழகம், சாய்ந்தமருது-04 பிளைங் ஹோர்ஸ் இளைஞர் கழகம் ஆகியவற்றின் அனுசரணையில் குறித்த நுாலகம் மற்றும் ஜிம் சென்டர் ஆகியன திறந்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments:
Post a Comment