கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வெலோ சுதா என்பவர் துமிந்த சில்வா எம்பிக்கு பணம் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு துமிந்த சில்வாவின் வங்கிக் கணக்குகளை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய துமிந்த சில்வாவின் வங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்யும் வேலைகளை குற்றத்தடுப்புப் பொலிஸார் ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment