• Latest News

    January 29, 2015

    சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை

    முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
     
    பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது பிறந்த ஊரான அம்பலாங்கொடவில் அங்காங்கே பட்டாசுகள் கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது வேட்பாளராக போட்டியிட்டதன் காரணமாக மகிந்த அரசாங்கம் அவரை அரசியல் ரீதியாக பழிவாங்கியது. 

    இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இராணுவ பதவிப் பட்டங்கள், ஓய்வூதியம், வாக்குரிமை, குடியுரிமை என்பன பறிக்கப்பட்டதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டார். 

    இந்த நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்தார். 

    இதனால், அவருக்கு மீண்டும் இராணுவப் பட்டங்கள் உள்ளிட்ட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top