• Latest News

    January 29, 2015

    முதலில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர், மோசடிக்காரர்களை கைது செய்வோம் - ரணில்

    மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னரே மோசடிக் காரர்களை கைதுசெய்யவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

    தெனியாய – பல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

    நிவாரணங்கள் மூலம் மக்கள் நன்மை அடைய வேண்டும்.

    இதன் காரணமாகவே பெற்றோல் உள்ளிட்ட எரிதிரவங்களின் விலையை குறைக்குமாறு தாம் பணித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

    இதன் காரணமாக தற்போது நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் நன்மை அடைவார்கள்.

    முன்னாள் அரசாங்கம் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணத்தை மோசடி செய்திருக்கிறது.

    கடந்த நான்கு வருடங்களில் பாரிய அளவு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்திருக்க முடியும்.

    ஆனால் அதனை முன்னாள் அரசாங்கம் செய்யவில்லை என்று ரணில் கூறினார்.

    இதன் போதுஇ மக்களின் பணத்தை மோசடி செய்தவர்களை கைது செய்யுமாறுஇ பொது மக்கள் கோரினார்கள்.

    இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ முதலில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர்இ மோசடிக்காரர்களை கைது செய்வோம் என்று கூறினார்.

    கிராம மக்களின் கைகளில் பணம் புரளும் வகையிலான பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அடிமட்ட வர்த்தகங்கள் அதிகரிக்கும். இதனால் அரசாங்கத்துக்கு வரிவருமானமும் கூடும். இதுதான் வரி வருமானத்தைக் கொண்டு அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான வழி.

    இதனை விடுத்து நேரடிய அத்தியாவசிய பொருட்கள் மீது வரியை அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

    இதேவேளை எதிர்வரும் 29ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் போது விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முதலில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர், மோசடிக்காரர்களை கைது செய்வோம் - ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top