• Latest News

    January 30, 2015

    தமிழர் கலாச்சார மண்டபத்துக்கு தடையில்லை:கல்முனை முதல்வர்

    எம்.வை.அமீர்,எமஐ.சம்சுதீன்:
    கல்முனை மாநகரசபை ஆளுகைக்குள் உள்ள சாய்ந்தமருதில் கலாச்சாரமண்டபம் அமைக்கவேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஒன்றை கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத், 2015-01-29 ல் கல்முனை மாநகரசபையின் முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற மாநகரசபை அமர்வின் போது சபைக்கு முன்வைத்தார்.

    சாய்ந்தமருதில் கலாச்சாரமண்டபம் ஒன்றில்லாததன் காரணமாக அப்பிராந்திய மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் மாநகரசபையின் முயற்சியில், சாய்ந்தமருதில் கலாச்சாரமண்டபம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து அமைக்க ஆவணசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
    சபையில் பிரதிமுதல்வரால் முன்வைக்கப்பட்ட கலாச்சாரமண்டபம் தொடர்பான பிரரணை விடையத்தில் கருத்துத் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், தமிழர் தரப்பினால் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதற்கு கல்முனை மானகரசபையிடம் அனுமதிகோரப்பட்டபோது அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
    இக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமாரின் கூற்றை நிராகரித்ததுடன் கல்முனை மாநகரசபை தமிழர் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதை வரவேற்பதாகவும் கல்முனை மாநகரசபை எவ்வித தடையையும் விதிக்கவில்லை என்றும் சரியான ஆவணங்களைக் கொண்டுவந்து அதற்க்கான அனுமதியைப் பெற்றுசெல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழர் கலாச்சார மண்டபத்துக்கு தடையில்லை:கல்முனை முதல்வர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top