• Latest News

    February 23, 2015

    வடக்கு முதல்வருக்கு கன்னத்தில் அடித்தாற்போல் பதில் வழங்கியது சர்வதேசம்: ரணில்

    இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
    குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    அதில் ஒன்றே வடக்கு மாகாணசபை முதல்வரின் இனவாத கருத்தெனவும் , அதற்கான பதிலை கன்னத்தில் அறைந்தால் போல சர்வதேச சமூகம் வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதார்.
    இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் அச்சு ஊடகங்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
    சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
    சில அச்சு ஊடகங்கள் அதைப் பிரிக்கின்றார்கள், இதைக் கொடுக்க போகின்றார்கள் என செய்தியை வெளியிட்டதாவும், கடந்த 10 வருடங்களாக தன்னை அழித்து, அரசியலில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர்களால் அதை முடியாமல் போனதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கு முதல்வருக்கு கன்னத்தில் அடித்தாற்போல் பதில் வழங்கியது சர்வதேசம்: ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top