• Latest News

    February 23, 2015

    2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது

    2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளே இவ்வாறு மீளவும் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    2010ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் காணிகளை மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
    2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பயன்படுத்திய காணியின் அளவு 6427 ஏக்கர்களாகும்.
    போர் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வன்னி, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் 152 இராணுவப் படையணிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 48 ஆக குறைக்கப்பட்டுள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top