எம்.வை.அமீர்:
அம்பாறை மாவட்டத்தில் வாழும் மக்கள் நிறைய தேவைகளுடனும் பிரச்சினைகளுடனும் வாழ்வதை, தாங்கள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அம்மக்களுடம் கலந்துரையாடிய போது அறிந்து கொண்டதாகவும், கடந்த 30 வருடங்களாக இங்குள்ள கட்சிக்கு மக்கள் வாக்களித்து பாராளமன்ற உறுப்பினர்களாகவும், மாகாணசபை உறுப்பினர்களாகவும், ஏனையா உள்ளுராட்சி சபைகளுக்கும் அனுப்பியிருந்த போதும், அம்மக்களது அடிப்படைத்தேவைகளைத் தானும் குறித்த கட்சியால் செய்யமுடியாது போயுள்ளதாகவும், கஷ்ட்டங்களில் வாழும் இம்மக்களின் துயர் போக்க தங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலும் களமிறங்கும் என்று குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் 31-01-2015ல் சூறாவளிப்பயணம் மேட்கொண்டிருந்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும்,கைத்தொழில்,வணிக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்டக் குழுவினர், சாய்ந்தமருது பரடைஸ் வரவேட்புமண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டனர். பஸ்மிர் தலைமையில் பிரபல ஊடகவியலாளர்ரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது இணைப்பாளருமான அன்சார் அவர்களது வழிநடத்தலில் இடம்பெற்ற இன்நிகழ்வுக்கு, கௌரவ அதிதிகளாக சமூர்த்தி,வீடமைப்பு பிரதிஅமைச்சர்எம்.எஸ்.அமீர்அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அகில இலங்லிகை செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கிழக்கு மாகணசபை உறுப்பினர் சிப்லி பாருக்,வடமாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதுர்தீன் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரிசாத் பதியுதீன்,
வாக்குகளை பெருவாரியாக குரித்தகட்சிக்கு வழங்கி அதிகமான பிரதிநிதிகளைப் பெற்றுள்ள இப்பிராந்திய மக்கள் அடைந்துள்ள பயன் என்ன என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது என்றார்.
குறுகிய காலத்துக்குள் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பலவேறு தரம்களிலும் மக்கள் பிரதிநிதிகளைப் பெற்றுள்ளதாகவும் அதனோடு நின்றுவிடாது வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையான அபிவிருத்திகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே தற்போது அம்பாறை மாவட்ட மக்களுக்கும் சேவை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அதற்காக இப்பிராந்திய மக்கள் ஒன்றிணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கும் மக்கள் பிரதிநிதிகளைப் பெற்றுத்தந்தால் வடக்கு மக்களுக்குச் செய்தது போல் அம்பாறை மாவட்டமக்களுக்கும் அதிகமான அபிவிருத்திகளை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை பற்றிக்குறிப்பிட்ட அமைச்சர் கிழக்கின் முதலமைச்சரை முஸ்லிம்காங்கிரசை எடுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ள போதிலும் இன்னும் அவர்கள அதனை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அமைத்துள்ள புதிய ஆட்சியில் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து எல்லோருடனும் இணைந்து செயற்படவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரும்புவதாகவும் முதலமைச்சர் யார் பெறுவது என்ற விடையத்தில் வைத்து சமூகங்களுக்குள் விரிசல் ஏற்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் குறித்த இம்முதலமைச்சர் விடையத்தில் எல்லாசமூகங்களும் ஒன்றிணைந்து எடுக்கின்ற தீர்வையே தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.


0 comments:
Post a Comment