• Latest News

    February 01, 2015

    அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதி செயப்படும்: அமைச்சர் ஹக்கீம்

    எம்.வை.அமீர்:
    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் ஜலால்தீன் அவர்களுக்குப் பின்னர் பாராளமன்றப்பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கும் அட்டாளைச்சேனை மக்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாராளமன்ற பிரதிநிதித்துவம் உறுதி செய்து கொடுக்கப்படும் என்று ஸ்ரீ லங்கள் முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நகரஅபிவிருத்தி நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தில் பிரதேசசபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் மன்றத்தின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் 31-01-2015ல் இடம்பெற்ற அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்துக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அரசியலில் தற்போது நல்லசகுணம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய சிறிய பதவிகளுக்காக பிரிந்துவிடவேண்டாம் என்றும், அவ்வாறான மக்களாக தான் அட்டாளைச்சேனை மக்களை கருதவில்லை என்றும், கட்சிக்காக பல்வேறு துன்பியல் நிகழ்வுகளை சந்தித்த மாக்கள் அட்டாளைச்சேனையில் வாழ்வதாகவும், அவர்களில் சிலர் கட்சிக்காக உழைத்ததில் பல்வேறு நீதிமன்ற வழக்குகளிலும் முன்னிலைப்படுத்தப் பட்டு மரணித்த பின்னரும் அவர்களுக்காக நீதிமன்றத்துக்கான அழைப்பு வரும் சகோதரர்களும் வாழ்ந்து மரணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    நாட்டில் தேசிய அரசு உருவாகியுள்ளதைப் போன்று கிழக்குமாகாண சபையிலும் அவ்வாறான ஒரு சபை உருவாகவுள்ள இத்தருணத்தில் தேசிய என்ற பெயரில் இணைத்துக்கொள்ளாது அச்சபையின் உயர் அமைப்பை அமைக்கக்கூடாது என வேண்டுகொள்கள் வருவதாகம் அந்த விடையத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகத்தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    கடந்த 10வருடங்களாக இறுக்காமான பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கி இருந்ததாகவும் அவ்வாறான நிலையை மாற்றக்கூடிய அமைச்சு தற்போது முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்துள்ளதாகவும் அதனை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு அழைத்துவந்து பெரியமாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் பெற்றுக்கொண்ட வெற்றியை விட அதனை தக்க வைத்துக்கொள்ள எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, இன்னும் ஒற்றுமைப்படுவதன் ஊடாகவே பெற்ற வெற்றியை தாங்கள் பிரயோசனப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் கிழக்குமாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் மாகாணசபை உறுப்பினர் உட்பட கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்களுடன் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதி செயப்படும்: அமைச்சர் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top