• Latest News

    February 25, 2015

    புலிக்கதைகளையும், சர்வதேச பழிவாங்கல் கதைகளையும் கூறி அமைதியைக் குழப்ப வேண்டாம்

    புலிக்கதைகளையும், சர்வதேச பழிவாங்கல் கதைகளையும் கூறி, நாட்டில் தற்போது நிலவும் அமைதியைக் குழப்ப வேண்டாம். தேசிய அரசை அமைக்க கடுமையாகப் பாடுபட்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் இணைப்பாளரும், கோட்டே நாக விகாரையின் விஹாரா பதியுமான மாதுலுவாவே சோபிததேரர். 
    "இந்த அரசு நாட்டுக்கு அச்சுறுத்தலாகத் தெரியுமாயின் அதனை மாற்றியமைப்போம்.'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   தேசிய அரசின் செயற்பாடுகள் பிரிவினைவாதமாக உள்ளது என்று எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   "சர்வாதிகார ஆட்சியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க நாம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டோம். எமது உயிர்களைப் பணயம் வைத்தே ஆட்சி மாற்றத்துக்காகப் போராடினோம். 
     சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாதிகளின் செயற்பாடுகள் பரவிக் கிடந்தபோதும் அனைத்துக்கும் அப்பால் மூவின மக்களை ஒன்றிணைத்து நாட்டை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   "பிரிவினைவாதம் என்றும், சர்வதேச பழிவாங்கல்களுக்கு நாட்டை உட்படுத்துவதாகக் கூறுவதாலும் நாடு பிளவுபடப் போவதில்லை. நாட்டில் தற்போது சமாதானமான ஆட்சி அமைந்துள்ளது.
     அதனை சிதறடித்து நாட்டை குழப்பத்தை ஏற்படுத்த முனையக் கூடாது.   தேசிய அரசின் மூலம் நாட்டை பிளவுபடுத்த எவரேனும் நினைத்திருந்தால், நாம் இடம் கொடுக்கப் போவதில்லை. நாம் எப்போதும் மக்களின் நலன் கருதியே சிந்திக்கின்றோம். மக்களை கஷ்டப்படுத்தும் ஆட்சிக்கு ஒரு போதும் உதவி செய்ய மாட்டோம்.'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலிக்கதைகளையும், சர்வதேச பழிவாங்கல் கதைகளையும் கூறி அமைதியைக் குழப்ப வேண்டாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top