எஸ்.அஷ்ரப்கான்:
கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான உள வள கல்வி வழிகாட்டல் ஆலோசனை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான கருத்தரங்கு கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் தலைவர் ஏ.எல்.எம். அஸாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம வளவாளராக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உள மருத்துவர் யு.எல். ஸறாப்டீன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய அதிபர் முஹம்மட் றஸாக் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் பங்குகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டது.


0 comments:
Post a Comment