எம்.வை.அமீர்:
கடந்த காலங்களில் கொடிகட்டிப்பறந்த சாய்ந்தமருதின் சில பாடசாலைகள் தற்போது ஆட்டம்காண ஆரம்பித்துள்ளன. முன்னிலையில் இருந்த சில பாடசாலைகளின் அடைவுமட்டங்கள் தற்போது சரிவடைந்து செல்கின்றன. பிராந்தியத்தின் அபிவிருத்தி என்பது, அதிகரிக்கும் கல்வியாளர்களை வைத்தே கணிக்கப்படவேண்டிய இன்றைய சுழலில், சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த காலங்களில் முன்னனியில் திகழ்ந்த சில பாடசாலைகள், சரியான முகாமைத்துவம் இல்லாமையாலும், சாய்ந்தமருதின் அபிவிருத்தியில் அக்கறைகொள்ளும் சமூக ஆர்வலர்களின், அக்கறையின்மை காரணாமாகவுமே இவ்வாறான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளை சரியான முறையில் நிருவாகித்து வழிநடத்தக்கூடிய சிறந்த கல்வியாளர்களும், மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களும் இப்பிராந்தியத்தில் நிறைந்து காணப்படுகின்ற போதிலும் இல்லை என்ற நிலையே இப்போது நிலவுகிறது. ஊரை நிருவகிக்க்க்கூடிய உயர்சபைகளும் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் தனிப்பட்டவர்களும் இருக்கும் இந்த ஊரின், பின்னடைந்து செல்லும் கல்விநிலையை முன்கொன்டுவர இவர்கள் முன்வரவேண்டும்.
நன்றாக கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களும் நிருவாகிகளும் இப்பிரதேசத்தில் இருந்து வேறுபிரதேசங்களுக்கு மாற்றலாகிசென்றுள்ளதும், தகுதியான நிருவாகிகளும் ஆசிரியர்களும் இருக்கத்தக்கதாக, தகுதியற்ற சிலர் தங்களுக்கு இருக்கும் உயர் செல்வாக்கைப் பயன்படுத்தி பாடசாலைகளை தங்களது கைக்குள் போட்டுக்கொண்டு ஆழநினைப்பத்தும் தங்களுக்கு சரியான இடம் கிடைக்கவில்லையே என சிலர் விரக்தியுடன் இருப்பதுமே தற்போது ஏற்பட்டுள்ள அபாயகரமான கல்விப்பின்னடைவுக்கு பிரதான காரணமாகும்.
விசேடமாக அதிகம் பேசப்படும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையினதும் கல்முனை மஹ்முத் மகளிர் பாடசாலையினதும் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ள அல் ஹிலால் விதியாலயத்தினதும் அதிபர்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும். பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை சாய்ந்தமருதில் இருந்து மாற்றலாகிச் சென்றுள்ள ஆசிரியர்களைக் கொண்டு உடனடியாக நிவர்த்திக்க வேண்டும். அநேக பாடசாலைகளில் காணப்படும் இடத்தட்டுப்பட்டைப் போக்க கட்டிடங்களை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை தளபாடம் மற்றும் ஏனைய அவசர தேவைகளை கண்டறிந்து அவைகளையும் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடசாலைகளுக்கு வந்து சரியான முறையில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாத மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களையும், எட்டு வருடங்களையும் தாண்டி செல்வாக்கை பயன்படுத்தி அதேபாடசாலையில் இருந்து கொண்டு மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் ஆசிரியர்களை உடனடியாக குறித்தபாடசாலைகளில் இருந்து அகற்றவேண்டும்.
உள்ளூர் அரசியல்வாதிகளும் உயர்சபைகளின் தலைவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும், கோட்டக்கல்வி ,வலையகல்வி மற்றும் மாகாணக்கல்வி அதிகாரிகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, பாடாசாலைகளையும் கல்விநிலையையும் உயர்நிலைக்கு கொண்டுசெல்ல விரைந்து நடவடிக்கை எடுக்காது போனால் எதிர்காலத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்விநிலை வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும்.

0 comments:
Post a Comment