ஆதம்பாவா பாக்கிர் ஹுசைன், முஹம்மட் ஜெலீல்:
இதற்கு முன்னரும், பல தடவைகள் மின்னல் நிகழ்ச்சி பற்றியும்,அதில் கலந்து கொள்ளும், ஒரு கட்சி சார் நிலையில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்கா அவர்களின் பக்கச்சார்பு கருத்துக்கள் பற்றியும் பல்வேறு நிலைகளில், பல்வேறு சந்தர்பங்களில் நாம் பல பதிவுகள்/செய்திகள்இட்டிருந்தாலும், அவரது சிறு பிள்ளை தனமான பேச்சும், தனது சிற்றறிவுக்கு உட்பட்டு உளறும் கருத்துக்களும் , மீண்டும் மீண்டும்அந்த நிகழ்ச்சி பற்றியும் , அதன் நிகழ்ச்சி தொகுப்பாளராகிய ரங்காவை பற்றியும் எழுதவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
மின்னல் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதே, தமிழ் மக்கள் மீது அப்போது இருந்த அதிகார மற்றும் உரிமை மீறல்கள் என்ற விடயங்களை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லுவதன் மூலம் ,அப்போதைய அரசாங்கங்களுக்கு ஒரு அழுத்தத்தை பிரயோகிப்பதுஎன்ற கொள்கையில் மட்டுமே இயங்கி வந்தது, பின் அதை தொகுத்து வழங்கும் நபரின் கபட நாடகமும், அப்போது இருந்த அரசுகளின் அவருக்கிருந்த பின் கதவு தொடர்புகளும் , பதவிக்காய் பாய் விரித்து கொடுக்கும் மனப்பாங்கையும் பார்த்து அவர் சார்ந்த மக்களே அந்த நிகழ்ச்சியின் இருக்கும் நம்பகத்தன்மை மேல் பாரிய சந்தேகம் கொண்டு ஒதுங்கிய பின், தன் மீது ஏற்பட்ட சந்தேகத்தைமறக்கடிகவும், அதை மழுங்கடிக்கவும் அவர் கையில் எடுத்தது தான் , மலையகம் மற்றும் முஸ்லிம் அரசியல் என்னும் முதலைக்கண்ணீர்.
அந்த முதலைக்கண்ணீர் விடயத்தில் அவர் நன்றாகவே கண்ணீர் விடுவதும் அதில் சற்று வெற்றி கொண்டுவருவதும் நாம் சமீபகால மின்னல் என்னும் கருப்பொருள் இல்லாத ஒரு நிகழ்ச்சி மூலம் கண்டு கொள்ள கூடியதாக இருப்பது நிச்சயம் கவலை தரும்விடையமே. அதில் அந்த ரங்காவை சொல்லியும் குற்றமில்லை,அற்ப விளம்பரத்துக்கும், சுய தம்பட்டம் என்ற நோயிலும் தளைத்து போயுள்ள எமது முஸ்லிம் அரசியவாதிகளினதும், மற்றும் இன்னும் பிற படிப்பாளிகளினதும் ஆசைக்கு தீனி போடுவது போல இந்த நிகழ்ச்சி இருப்பதனால் , அவர்களில் பலர் தாமாகவே முன்வந்தும் ,இன்னும் சிலர் அழைக்கப்பட்டும் , எதோ மந்திருத்து விடப்பட்ட கோழிகள் போல, அங்கு ரங்காவால் வைக்கப்படும் கேள்விகளுக்கும், அதே கேள்விகளுக்கு அந்த ரங்காவால் முன் வைக்கப்படும் பதில்களுக்கும் தலையாட்டி பொம்மைகள் போல தலையை மேலும் கீழும் ஆட்டி விட்டும், அதையும் மீறி சிலர்,தமது எதுகை மோனை தமிழ் அறிவை அங்கு பரீட்சித்து பார்ப்பதும் என்பதை தாண்டி அந்த நிகழ்ச்சி இருப்பதில்லை என்பது சற்று எரிச்சலையும் கவலையையும் எமக்கு ஏற்படுத்தி சென்றுவிடுகின்றது.
இந்த பதிவை நாம் இங்கு முன் வைக்க என்ன காரணம் என்பதை பற்றி சற்று நாம் ஆராயவேண்டிய தேவையும் உண்டு. சமீப காலமாக அந்த நிகழ்ச்சியில் எம் சமூகத்தை பற்றியும் , அதன் அரசியல் செயற்பாடுகளை பற்றியும் அல்லது எம் சமூக்கத்தில்உள்ள ஒரு சராரி அரசியல் செயற்பாடுகளையும் ஒட்டு மொத்தமக்களையும் குறிப்பிட்டு சொல்லுவதன் மூலம், இரு இனங்களுக்கிடையில் சந்தேகம் மற்றும் பிரிவினைவாதத்தை விதைக்கும் பாரியதொரு ஈனச்செயலை அவர் செய்வது நிச்சயம் நாம் கண்டிக்கவேண்டிய தேவை மட்டுமல்லாது, அது எதிர்காலஇலங்கைக்கு மிகப்பெரும் ஆபத்தையும் விளைவிக்கும் என்பதையும் கருத்தில் எடுக்க வேண்டும்.
இலங்கை அரசியல் சாசனத்தின் படி, ஒரு சபையில் பெரும்பான்மை பெற்றுள்ள ஒரு கட்சி அல்லது ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கும் சக்தியை பெறும்போது அதை இனவாத கண்கொண்டு நோக்குவதும், அதை வைத்து தமிழ், முஸ்லிம் மக்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அதில் அரசியல் குளிர் காய எத்தனிக்கும் ஈனச்செயலை ரங்கா மிகவும் காத்திரமாக எமது மக்களை வைத்தே செய்வது என்பது நிச்சயம் அவர் மீது ஏற்கனவே அவர் சார்ந்த மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையைஊர்ஜிதப்படுத்தி சென்று விடுகின்றது.
என்றோ அழிந்து போயுள்ள புலிகளின் பிளவுக்கு மிகப்பெரிய சர்வதேச சதி இருப்தாக கருதப்படும் வேளையில், அவர்களின் போராட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவை ஒரு மனிதாபிமான முறையில் காப்பாற்றிய ஒரு நபரை வைத்து, தனதுவஞ்சகத்தை தீர்க்க முனைவது என்பது ரங்கா முட்டையில் எதையோ தேடிக்கொண்டிருப்பதை தாண்டி எனக்கு எதுவும் சொல்ல முடியாதுள்ளது. தான் ஒரு தமிழ் சமூக விடுதலையில் கரிசனை உள்ள போராளி என்றால், ஏன், அவர் கருணா, மற்றும் பிள்ளையானையும் , தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் ஒரேமேடையில் அழைத்து தனது சமூகம் சார்ந்த இச்சையை,சந்தேகத்தை, பிளவை, தோல்வியை பற்றி பேசக்கூடாது. யாரோ ஒருவன் செய்த சதிக்கு , ஒன்றுமே அறியாத, ஒரு மனிதாபிமானம் உள்ள ஒரு நபரை குடைந்து குடைந்து கேள்வி கேட்பதன் மூலம்,ரங்கா தனது நிகழ்ச்சிக்கான டி.ஆர் .பி ரேட் ஐ அதிகரித்துகொள்ளலாமே ஒழிய, அதை பார்பவர்கள் உம்மை எண்ணி வெக்கி தலை குனிந்துதான் போவார்கள்.
மின்னலில், ரங்காவின் உளறளின் படி, தமிழீழ போராட்ட தோல்விக்கு ஒட்டு மொத்த காரணமும் அலி சாகிர் மௌலானா என்ற தொனியில் இருந்தது நிச்சயம் அவர் ஒரு திட்டமிட்ட ,அசிங்கமான சிந்தனை ஒன்றின் கருவியாக செயற்படுவதாகவேஎமக்கு புலப்படுகின்றது. கேள்வி கேட்பவரே அதிகம் விடை சொல்லுவதும், அவரே ,அவர் கேட்ட கேள்வியில் இருந்து விலகி சடுதியாக வேறு திசை நோக்கி அழைத்துசெல்வதும் நிச்சயம் அவரது அறிவின் வங்குரோத்து தனத்தை மட்டுமல்ல, தனது அரசியல் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள பயத்தின் மூலம் பேதலித்து போய் வரும் உளறலாகவும் கூட இருக்கலாம்.
இவர் போன்ற, ஒட்டுண்ணி அரசியல் செய்யும் நபர்களினால் நமது முஸ்லிம் அரசியலுக்கு என்ன லாபம், என்ன விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி நாம் சற்று உன்னிப்பாக ஆராய வேண்டிய கடமையும் உண்டு. இந்த இழி நிலைக்கு யார் காரணம் என்றும் நான் ஆராய வேண்டிய தேவையும் உண்டு. நமக்கென்று ஒரு அரசியல் சார் அல்லது ஒரு பொது ஊடகம் இல்லாமை இங்கு மிகப்பெரிய தாக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. நமது அரசியவாதிகளில் பலர், கப்பல் வைத்து வியாபாரம் பன்னுபவர்களாகவும், மிகப்பெரும் செல்வந்தர்களாகவும் இருந்த போதிலும் , அவர்கள் இந்த மின்னல் நிகழ்ச்சியை நடத்தும் சக்தி என்ற தொலைக்காட்சி என்ற நிறுவனத்தில் தமது பங்குகளையும்,அதில் வரும் லாபங்களையும் கருத்தில் கொண்டு இருபதுமே மிகப்பெரிய அவலம் மட்டுமல்ல வெட்கக்கேடும் கூட.
இலங்கையில், முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியான தொலைகாட்சி ஊடக வசதி இல்லாமை தான் ரங்கா போன்ற அரசியல் அனாதைகளுக்கு தமது சர்வதேச திட்டமிடப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு செய்டபாட்டை மிகவும் திட்டமிட்டு நகர்த்தி கொண்டு செல்ல களம் அமைத்து கொடுத்துள்ளது. இது பற்றி நமது அரசியல் தலைமைகள் அவசரமாகவும், அவசியமாகவும் கரிசனை கொள்ள வேண்டிய தருணம் இது. வெறுமெனே, வாய் மூடி மௌனமாக இருப்பதன் மூலமும், இலங்கை முஸ்லிம் அரசியல் பற்றி வரும் தப்பான , திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதன் மூலமும், நமது சகோதர சமூகத்தில் உள்ள பாமர மக்கள் மீது எம்மை பற்றிய பிழையான தகவல்கள் அல்லது கருத்துக்கள் செல்லுவதை நாம் அனுமதிக்க முடியாது.
காலங்காலமாக, முஸ்லிம் தொலைக்காட்சி சேவை என்ற தொனிப்பொருள் அவ்வப்போது பேசப்பட்டு வந்தாலும், அதன் உள்ளார்ந்த தேவை உணரப்படும் காலம் இது. அது இன்னும்இன்னும் காலதாமதம் ஆகுவது என்பது நிச்சயம், ரங்கா போன்ற கரப்பான்களுக்கு , தற்போது ஏற்பட்டுள்ள, முஸ்லிம்- தமிழ் உறவில் அரிப்பை ஏற்படுத்தி நிரந்தர பிரிவிற்கு வழி செய்து விடும்.
மின்னல் போன்ற நிகழ்சிகள் நிச்சயம் சிறு பான்மை இனக்களுக்கு ஒரு வரப்பிரசாமே , ஆனால், அந்த நிகழ்ச்சி ரங்கா போன்ற சில இனவாதிகளின் கைகளில் அகப்பட்டு சாபமாகவே மாறிவிடும் அவல நிலை மிகவிரைவில் நாடு எங்கும் எதிரொலிக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் ஊடக விற்பனர்களே,பெரும் செல்வந்தர்களே, இளைஜர்களே, ஊடகம் மூலம் தொடுக்கப்படும் நமக்கெதிரான ஒவ்வொரு அசிங்கங்களையும் அதே ஊடகத்தை கொண்டே உடைத்தெறிய முன்வாருங்கள். இதுஇக்காலத்தின் தேவையும் கூட.

0 comments:
Post a Comment