• Latest News

    February 16, 2015

    இரவு நேர பஸ் சேவை நடாத்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கை கோருகிறார் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை

    எம்.வை.அமீர் -
    இலங்கையில் மலர்ந்துள்ள புதிய நல்லாட்சியின் மூலம் முக்கிய பிரதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைவதாகவும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாராண நிலையின் காரணமாக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மாலை 06.00 மணியுடன் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும். இதன்காரணமாக மக்கள் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு மத்தியில் அப்போது போக்குவரத்து செய்ததாகவும். பல பாதுகாப்பு சாவடிகளில் ஏறி இறங்கியதாகவும். அந்த நிலை முற்றாக இல்லாமல் போயுள்ளதாகவும், இப்போதய நல்லாட்சியின் போது இரவு நேரத்தில் மக்கள் போக்குவரத்து செய்து கொள்ள இ.போ.சபையின் குறுகிய தூர பஸ் சேவை ஏற்படுத்தப்படுமா என மக்கள் அங்கலாய்ப்பதாகவும் கூறி போக்குவரத்துபிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்குக்கு சாய்ந்தமருது10 கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
    தொடர்ந்து எழுதியுள்ள எம்.எம்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாணத்தில் அதிலும் கல்முனை மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை 6.00 மணிக்கு பின்னர் இ.போ.ச பஸ் போக்குவரத்துக்கள் இல்லாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். வடக்கு மாகாணத்தின் தலைநகர்களுக்கும்  நாட்டின் பல பகுதியிலிருந்தும் இரவு நேர பஸ் சேவைகள் நடைபெறுகின்றன. மக்கள் போக்குவரத்து செய்வதையிட்டு மகிழ்வடைகிறேன். அவ்வாறாயின் ஏன் அம்பாரை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தினுள் அமைந்துள்ள கிராமங்களை இணைக்கும் வகையிலான பகல் பஸ் சேiவை போன்று இரவு பஸ் சேவைகளை நடாத்த முடியாது? மாலை 6.00 மணியுடன் அனைத்து பஸ் நிலையங்களும் (இ.போ.ச.) சோகமாக காட்சியளிக்கின்றன. தூர இடங்களில் இருந்து பிரயாணம் செய்து வரும் பொது மக்கள் தமது சொந்த கிராமத்திற்கு மாறி செல்வதற்கு பஸ் சேவை இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளன. மாறாக முன்னர் நடைபெற்றுக் கொண்டிருந்த சில முக்கிய பஸ் சேவைகளும் தற்போது இல்லாமல் போயுள்ளன.
    எனவே பிரதி அமைச்சரே! நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் ஏற்படு;த்தப் பட்டிருக்கின்ற 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பின்வரும் குறைபாட்டை தாங்கள் நிவர்த்தி செய்து மக்களின் நீண்ட காலத் தேவையை பூர்த்தி செய்து வைப்பீர்கள் என திடமாக நம்புகின்றோம்.
    இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய காரியாலம் கல்முனையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உதாரணமாக:

                 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாலை நேரத்தில் நோயாளியை பார்த்து விட்டு வரும் மக்கள் மட்டக்களப்பில் இருந்து தமது சொந்த இடத்திற்கு செல்வதற்கு மாலை வேலைகளில் பஸ் சேவை இல்லாமல் இருப்பதும்,
                 புகையிரத்தின் மூலம் பிரயாணம் செய்பவர்கள் தமது சொந்த இடத்திற்கு செல்வதற்கு மாலை பஸ் சேவை இல்லாமல் இருப்பதும்,
                 அம்பாரை ஊடாக பிரயாணம் செய்பவர்கள் அங்கிருந்து மாலை வேளையிற்கு பிறகு தனது சொந்த இடங்களுக்கு செல்ல பஸ் சேவை இல்லாமல் இருப்பதும்,
                 அக்கரைப்பற்றில் இருந்து மாலை வேளையிற்கு பிறகு பொத்துவில் செல்வதற்கு பஸ் சேவை இல்லாமல் இருப்பதும்,
                 கல்முனையிலிருந்து மாலை வேளையிற்கு பின்னர் திருகோணமலை செல்வதற்கு பஸ் சேவை இல்லாமல் இருப்பதும்,

    இந்த நல்லாட்சி அரசில் இவ்வாறான சேவைகள் இல்லாமை பாரிய குறைபாடாகவே இருக்கும்  என மக்கள் பேசிக் கொள்வதை அறிய முடிகின்றது.

    பின்வரும் பஸ் சேவையினை கல்முனை பஸ் டிப்போ மூலம் ஆரம்பிக்கவும் அதே போன்று ஏனைய பஸ் டிப்போக்களும் இரவு பஸ் சேவைகளை நடாத்தவும் தாங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

    1.            கல்முனையிலிருந்து கண்டியிற்கான பஸ் சேவை

    2.            கல்முனையிலிருந்து ஹபரணை ஊடாக திருகோணமலையிற்கான பஸ் சேவை

    3.            கல்முனையிலிருந்து ஹபரணை ஊடாக வவுனியாவிற்கான பஸ் சேவை

    4.            கல்முனையிலிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கான பஸ் சேவை

    5.            கல்முனையிலிருந்து துறை நீலாவணையிற்கான பஸ் சேவை

    6.            கல்முனையிலிருந்து மஜீத் புரத்திற்கான பஸ் சேவை

    7.            கல்முனையிலிருந்து நெயினாகாடுவுக்கான பஸ் சேவை

    மேற்குறித்த பஸ் சேவைகள்  ஏற்கனவே கல்முனையில் இருந்து நடாத்தப்பட்டு தற்போது கைவிடப்பட்டவைகளாகும். மக்களுக்காக பஸ் சேவைகள் மாலை வேளைகளில் இடம் பெற்றால் எதிர்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்கள் தனியார் வாகனங்களை வாடகையிற்கு அமர்த்தும் செலவில் இருந்தும். வாகன விபத்தில் இருந்தும் நீங்கிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடக் கூடியதாகும்.

    மேலும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பிரதேசங்களில் இரவு நேர பஸ் சேவைகளை துரிதமாக ஆரம்பிக்க தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையும், மக்களின் மனங்களில் புதிய மாற்றத்தினை மேலும் வளர்த்திட இது நல்ல சந்தர்ப்பமுமாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என்றும் அவர் தனது கடிதத்தில்தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரவு நேர பஸ் சேவை நடாத்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கை கோருகிறார் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top