• Latest News

    February 22, 2015

    ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களே மஹிந்தவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்: பாலித ரங்கே பண்டார

    ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
    மஹிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயமாக தோல்வியைத் தழுவுவார்.
    கடந்த தேர்தலில் மஹிந்தவிற்கு வாக்களித்தவர்கள் உண்மைகளை அறியாமல் வாக்களித்திருந்தனர்.
    தற்போது உண்மையான நிலைமை மக்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
    கடந்த அரசாங்கம் சீழ் பிடித்த காயத்தைப் போன்று மாற்றமடைந்துள்ளது.
    மஹிந்தவை பார்க்கப் போகின்றவர்கள் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள்.
    சில அமைச்சர்கள் தங்களுக்கு கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தியடைவதில்லை என்பது உண்மைதான்.
    எனினும், அரசாங்கம் அளித்த நூறு நாள் திட்ட வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும்.
    சில வேளைகளில் குறித்த நாட்களில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டாலும், நூறு நாட்களுக்குள் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பாலித ரங்கே பண்டார சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களே மஹிந்தவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்: பாலித ரங்கே பண்டார Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top