• Latest News

    February 23, 2015

    புல்மோட்டை சிறிய நகரம் நீர்வழங்கல் திட்டத்தை ரவுப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

    திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை சிறிய நகரம் நீர்வழங்கல் திட்டத்தை நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் திங்கட்கிழமை (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

    இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து பிரதியமைச்சருமான எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம்.லாஹிர், எம்.ஐ.எம். மன்சூர், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்பச் செயலாளர் எச்.எம்.எம்.பாயீஸ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் யூ. ரத்னபால, கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் பொறியிலாளர் என். சுதேசன், பிரதான பொறியிலாளர் கரீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த புல்மோட்டை சிறிய நகர நீர் வழங்கல் திட்டத்தின் பயனாக குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்மோட்டை 1,2,3 மற்றும் 4ஆம் கிராம சேவைப் பிரிவுகளில் வசிக்கும் 3000 குடும்பங்களின் நாளாந்த நீர் தேவை நிறைவு செய்யப்படுகிறது.

    முன்னர் பல்மோட்டை மக்கள் தங்களது பாவனைக்கு கிணற்று நீரையே முற்றிலும் நம்பியிருந்தனர். நிலக்கீழ் நீர் இலகுவில் அசுத்தமடையும் தன்மை கொண்டதால் அவற்றை பருகுவோர் நோய்களுக்கு உள்ளாகும் நிலைமை காணப்பட்டது.

    135 மில்லியன் ரூபாய்கள் செலவில் நவீன வசதிகளைக் கொண்டதான புல்மோட்டை சிறிய நகர நீர் வழங்கல் திட்டம் ஜப்பானின் ஜய்கா நிறுவன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் நவீன இயந்திர வசதிகளுடன் கூடிய சுத்திகரிப்பு நிலையமும். பாரிய நீர்தாங்கியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு நீர் நிலைகளிலிருந்து இதற்கான நீர் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

    டாக்டர் எ.ஆர்.ஏ.ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புல்மோட்டை சிறிய நகரம் நீர்வழங்கல் திட்டத்தை ரவுப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top