(எம்.சஹாப்தீன்)இன்றைய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுள்ள ஊழல்களை விசாரணை செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்காத அதிகாரிகளையும் இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன்அலி நேற்று நிந்தவூர் அல் - அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற 'வாழ்வின் ஒளி' நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நியமனத்தில் எம்மீது பாரிய அளவில் குற்றச்சாட்டுக்களை தமிழ்த் தரப்பினர் முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், தமிழர்கள் செய்த தியாகங்களை மு.கா ஒரு போதும் மறக்கவில்லை. தமிழர் தரப்பினருக்கு மிகச் சிறந்த இடத்தினை வழங்க வேண்டும். அதற்காக முஸ்லிம் சமூகம் விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தினை நாங்கள் எடுத்துள்ளோம். எமது முயற்சி இப்போது வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்துவதற்காகன நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இதன் மூலமாக மத்திய அரசாங்கத்தின் கீழ் வர வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், தமது முடிவுகளை மாற்றி மாகாண சபைகளின் கீழேயே இருப்பதற்கு விரும்புவர்.
மேலும், முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களின் 30ஆயிரம் ஏக்கர் காணிகளை மீட்டேடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளை தொகுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இனிவரும் காலங்களில் நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும். அதற்காக அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருப்போம் என்று நினைக்க வேண்டாம்.
அடுத்து வருகின்ற வாரங்டகளில் பாராளுமன்றத்தில் முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, மாற்றங்கள் இடமபெறவுள்ளன. 18வது திருத்தச் சட்டத்தினை இல்லாமல் செய்வது, சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் இயங்கச் செய்வது போன்றவைகள் நடைபெறவுள்ளன.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டங்களுக்கு மேலாக, நாங்கள் கட்சிக்குள் 100 நாள் வேலைத் திட்டங்களை வகுத்துள்ளோம்.
0 comments:
Post a Comment