-அபூ-இன்ஷப்;
மக்களின் காலடியில் சேவை என்ற நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் நடமாடும் சேவை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூட வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்று வருகின்ற இந்த நடமாடும் சேவையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ;ஷேய்க் எம்.ஐ.அமீர் - நளீமி உட்பட மாவட்ட செயலக காணிப்பிரிவு அதிகாரிகள் பலரும் கலந்த கொண்டுள்ளனர்;.
இந்த நடமாடும் சேவையில் காணிப்பிரிவு, ஆட்பதிவுத்திணைக்களப் பிரிவு, பதிவாளர் பிரிவு, திவிநெகும திணைக்கள பிரிவு, ஓய்வூதியப்பிரிவு, மோட்டார் போக்குவரத்துப் பிரிவு, சமூக சேவைப் பிரிவு, பொலிஸ்திணைக்கள சேவைகள்,தபால் திணைக்கள சேவைகள் என்பன இடம் பெற்று வருகின்றன.
மேலும் இந்த நடமாடும் சேவையின்போது சமூக சேவைத்திணைக்களத்தினால் வழங்கப்படும் விஷேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுக் காசோலைகள், திவிநெகும திணைக்களத்தின் சமூகப்பாதுகாப்புக் கொடுப்பணவுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments:
Post a Comment