-எம்.வை.அமீர்:
கடந்தவருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைதீவு ஆர்.கே.எம் பெண்கள் வித்தியாலய மாணவிகளை பரிசுவழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் 2015-03-25 ல் இடம்பெற்றது.
மாணவிகளுக்கான பரிசில்களை காரைதீவு மக்கள்வங்கி வழங்கியிருன்தாது. நிகழ்வில் காரைதீவு மக்கள்வங்கியில் கணக்கு வைத்திருந்த இரு மாணவிகள் தலா 5000 ரூபாய்கள் பணப்பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய 17 மாணவிகளும் காரைதீவு மக்கள்வங்கியினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வுக்கு காரைதீவு மக்கள்வங்கியின் சார்பில் ஏ.ஆர்.றிஸ்வான் முஹம்மட், ரீ.உமாசங்கர் மற்றும் என்.கினேஷ் ஆகியோர் கலந்து பரிசில்களை வழங்கிவைத்தனர்.



0 comments:
Post a Comment