(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இக்ரா
பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தினால் சர்வதேச மகளிர் தினத்தை
முன்னிட்டு 'மனித நாகரிக வளர்ச்சிக்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு'
எனும் மகுடம் தாங்கி பெண்களுக்கான மகளிர் தின நிகழ்வு ஒன்று பிஸ்மி தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
இதில் பிஸ்மி கிண்டர்காடன், பிஸ்மி
அல்குர்ஆன் பாடசாலை, பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை மாணவ மாணவிகளின்
தாய்மார்களும் இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தின்
உறுப்பினர்களும் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் என அதிகமான பெண்கள்
கலந்து கொண்டனர்.
இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய
அழைப்பு மையத்தின் செயலாளர் திருமதி ஹூமைரா ரிஹாஸ் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடியை சேர்ந்த பெண் வைத்தியர்கள்,
அதிபர்கள், சட்டத்தரணிகள், கிராம சேவகர் என பலரும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மகளிர் உரிமைகள் கடமைகளை பிரதிபலிக்கும் வகையில் பெண்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன.
இதன்
போது இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தின் உறுப்பினர் பஸ்லினா
நுசைர், வைத்தியர் நழீரா அயாஸ்,மௌலவியா சில்மியா தாரிக், சூரியா பெண்கள்
அமைப்பின் உறுப்பினர் விஜய லக்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்வின்
முக்கிய அம்சமாக இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தினால் 'மனித
நாகரிக வளர்ச்சிக்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்பிலான
சிறப்பிதழ் ஒன்றும் புத்தக அடையாள குறி ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment