எம்.வை.அமீர்:
சர்வதேசமெங்கும் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தில் இலங்கையில், “பெண்ணிற்கான சிறந்த நாடு” எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சாய்ந்தமருதில் மகளிர்தினத்தை முன்னிட்டு, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.றிஸ்வானுள் ஜன்னா தலைமையில் 2015-03-16 ல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தர், எம்.எம்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், கணக்காளர் எம்.எம்.உசைனா விசேட அதிதியாகவும் கலந்து கொண்ட அதேவேளை, வளவாளராக சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.றிஸ்வானுள் ஜன்னா, சர்வதேச மகளிர்தின நிகழ்வு பற்றியும் அதன் வரலாறு பற்றியும் நீண்ட கருத்துரையாற்றினார். வளவாளராக கலந்து கொண்ட சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சன் அவர்கள் தனது உரையில், சிறந்த நாட்டைக்கட்டியேழுப்ப பெண்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயட்படவேண்டியதன் அவசியத்தையும் பெண்களுக்கு துன்புறுத்தலற்ற நாட்டை பெற அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் அவசியத்தையும் வலியுறித்தி உரையாற்றினார்.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ. கப்பார், திவினகும முகாமையாளர் ஏ.சீ.நஜீம்,சமுர்த்தி திவினகும செயற்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா ,ஜீ.என்.ஒ.ஏ.ஒ.நளீர்,ஆயுர்வேத வைத்தியர் டாக்டர் என்.ஜே.ஹசன் மற்றும் சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment