
மேற்படி விடயம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் காணி மீட்பு மறுசீரமைப்பு திணைக்களத்தில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
கரையோரப் பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் முக்கிய நகரங்களை ஊடறுத்துச் செல்லும் தோணாக்களை புனரமைத்து வடிகாலமைப்பதென தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முபீன் தெரிவித்தார். கல்முனை நீலாவளை சாய்ந்தமருது காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசங்களில் தோணாக்களுக்கான நிரந்தர வடிகால் அமைப்பதற்கான திட்டங்கள் அமைச்சரின் பணிப்பின் பேரில் காணி மீட்பு மறுசீரமைப்பு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சீன விஜயத்தின் போது மேற்படி வடிகான் திட்டத்திற்கான நிதியை பெற்றுக்கொள்ள அமைச்சர் ஹக்கீம் துரித நடவடிக்கை எடுத்து வருவதாக இணைப்புச் செயலாளர் முபீன் மேலும் தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் காணி மறுசீரமைப்பு திணைக்களத் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அப்துல் மஜீத், காணி மீட்பு மறுசீரமைப்பு திணைக்களத்தின் பிரதம செயலாளர் மற்றும் திட்ட வரைஞர்கள், நீர்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment