(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சவூதி
அரேபிய நாட்டின் றியாத் நகரிலுள்ள அல் இமாம் சுஊத் பல்கலைக்கழக தொலைக்
கல்வி நிறுவனத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளையொன்று விரைவில்
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதற்கான
உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 16-03-2015 நேற்று திங்கட்கிழமை இரவு
காத்தான்குடி அல்-மனார் அல்-ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்
போது மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் சார்பில் அதன்
தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் சுஊத்
பல்கலைக் கழகத்தின் சார்பில் சுஊத் பல்கலைக் கழக தொலைக் கல்வி நிறுவனத்தின்
பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹ்மத் அஸ்ஸூதைஸூம் உடன்படிக்கை ஒப்பந்தத்தை
கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வில் சர்வதேச மனிதவள
அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி
அஷ்ஷெய்க் காலித் அத்தாவூத்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின்
செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி), அம்பாறை மாவட்ட
ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஆதம்பாவா,வெலிகம ஹப்ஸா மகளிர் அறபுக்
கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் பத்ஹூர் ரஹ்மான் (பஹ்ஜி), தென் கிழக்கு
பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க்
ஏ.எம்.அலியார் (றியாதி) ,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின்
சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) உட்பட உலமாக்கள்,
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி அதிகாரிகள்,கிழக்கிலங்கையிலுள்ள அரபு
மத்ரஸாக்களின் அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி
அல் இமாம் சுஊத் பல்கலைக்கழக தொலைக் கல்வி நிறுவனத்தின்
கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளையொன்று திறக்கப்படுவதன் மூலம் கல்விப்
பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஆண்,பெண்
உலமாக்கள்,மௌலவிமார்கள் ,மௌலவியாக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment