• Latest News

    March 10, 2015

    ஆசியான் மன்றத்தினால் நகர அபிவிருத்தி, கல்முனை காரியாலயத்துக்கு கணணி உபகரணங்கள் வழங்கிவைப்பு

    எம்.வை.அமீர் எம்.ஐ.சம்சுதீன்:
    கல்முனை மாநகரசபையின் முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருமான சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் அனுசரணையுடன் ஆசியான் மன்றம், கல்முனை மாநகரசபையுடன் இணைந்து செயற்படுத்திவரும் செயத்திட்டத்துக்கு அமைவாக, கொய்க்கா நிதிஉதவியுடன், கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபைக் காரியாலயத்துக்கு நகரத்திட்டமிடல் செயற்பாட்டுக்காக கணணி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

    மேற்படி கணணி உபகரணங்களை ஆசியான் மன்றத்தின் சார்பில் கல்முனை மாநகரசபையின் முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருமான சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் அவர்கள், கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலக பொறுப்பாளர் திருமதி ஜே.தியாகராஜா அவர்களிடம் வழங்கிவைத்தார்.

    நிகழ்வில் கல்முனை பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத்,மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஆசியான் மன்ற திட்டமிடல் அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை படவரைஞனர் எம்.சீ.எம்.முனீர் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆசியான் மன்றத்தினால் நகர அபிவிருத்தி, கல்முனை காரியாலயத்துக்கு கணணி உபகரணங்கள் வழங்கிவைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top