(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை நெயினாகாடு, குடுவில், இறக்காமம் ஊடாக அம்பாரை நகரிக்கு பிரதேச மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் அவர்களின் முயற்சியால் புதிய பஸ் சேவை ஆரம்பிக்க நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வீதியினுடாக பஸ் சேவை ஆராம்பிப்பதற்கான பரீட்சார்த்தமாக நெயினாகாடு குடுவில் வீதியின் நிலையை இன்று நேரில் சென்று பார்வையிட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் அவர்களின் தலைமையில் சம்மாந்துறை போக்குவரத்து சபை நிலையப் பொறுப்பதிகாரி எம்.தாஸிம்;; ,இறக்காம பிரதேச சபை தவிசாளர் மௌலவி ஏ.எல்.ஜபீர், உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பிரதேச வாசிகள் என பலரும் வீதியை பார்வையிட சென்றனர்.
இதன்போது குடிவில் நெயினாகாடு வீதியினுடாக பஸ் சேவையினை ஆராம்பிக்க சாதக நிலைமையினையும் மற்றும் வீதியில் உள்ள திருத்த வேலைகளை மேற் கொள்ளத்தேவையான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் வேண்டுகோள் விடுத்தனர்.

0 comments:
Post a Comment