அபு அலா –
தேசிய டெங்கு ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு நாடளாவிய ரீதியில் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் “புதியதோர் பழக்கம் – டெங்குவிற்கு தடுப்பு” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பித்து வைத்தனர்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை அட்டாளைச்சேனை 15, 16 ஆம் பிரிவுகளில் உள்ள அரச பாடசாலைகள், திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களை பார்வையிட்டனர்.
இந்த இரு கிராம சேவகர்கள் பிரிவுகளை பார்வையிடுவதற்கா 16 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வீட்டின் சுற்றுச் சூழலும் பார்வையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் பங்கு கொண்டனர்.







0 comments:
Post a Comment