• Latest News

    March 27, 2015

    முஹ்லிஸ் வஹாப்தீன் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்திதிணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம்

    எம்.வை.அமீர் -
    அக்குரணை முஹ்லிஸ் வஹாப்தீன் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி திணைக்களத்தின் (National Enterprises Development Authority)பணிப்பாளராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவர், சுவிட்சர்லாந்தில் இயங்கிவரும் SHAMAAZ GMBH கம்பனியின் பணிப்பாளருமாவார். கிராம மட்டத்தில் பள்ளிகளை மையப்படுத்தி கல்வி மேம்பாட்டுக்காக தனது பங்களிப்பை வழங்கி வருவதோடு சமூக சேவையில் ஆர்வமுள்ளவராகவும் காணப்படுகிறார். 

    சமூக சேவைகளில், குறிப்பாக கல்வி அபிவிருத்திப் பணிகளில் பல வருட காலங்களாக மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இவர், தனது பாடசாலைக் கல்வியை அக்குறணை அஸ்ஹர் கல்லுாரியில் கற்ற பின், தனதுஉயர்கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் (வெளிவாரி மாணவனாக) கற்றுக் கொண்டிருந்த வேளையில் சுவிட்ஸர்லாந்துக்கு வியாபார நோக்கமாக சென்றார். அங்கிருந்தவாறே தனது உயர்கல்வியை நிறைவு செய்த இவர் ஜெனீவாவில் இயங்கி வரும் பல சமூக சேவைநிறுவனங்களின் அங்கத்தவராக கடமையாற்றியவருமாவார். ஜெனீவாவில் வாழும் இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

    அக்குரணை அஸ்ஹர் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் முன்னாள் அக்குரணை பிரதேச சபை உறுப்பினருமான M.M.வஹாப்தீனின் புதல்வராவார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஹ்லிஸ் வஹாப்தீன் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்திதிணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top