அபூ-இன்ஷப்:
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச விவசாயிகள் எதிர் நோக்குகின்ற நீர்பாசன பிரச்சினை தொடர்பாக கண்டறியும் முகமாக நீர்பாசனத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே  வீரகொடை குளத்திலிருந்து சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு நீரினைக் கொண்டு செல்லும் பிரதான 26ம் கொளனி வாய்கால் பிரதேசத்துக்கு விஜயம் செய்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
சம்புமடு, பனிச்சங்கேணி, வெட்டுக்காடு வட்டையின் வட்டவிதானை ஏ.எம்.ஹனீபா ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி அவர்களின் அழைப்பின் பேரில் பிரதியமைச்சர் இந்த விஜயத்தினை மேற் கொண்டார்.
வீரகொடை குளத்திலிருந்து சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு நீரினைக் கொண்டு செல்லும் பிரதான 26ம் கொளனி வாய்கால் பிரதேசத்தில் சுமார் 13ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகள் பாச்சலினை பெற்று வருவதாகவுக் இதனால் சுமார் 5ஆயிரம் குடும்பங்களின் ஜீவனோபாய தொழிலாக கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
விவசாயம் செய்கின்ற காலத்தில் நீர் தோவைப்படுகின்ற போது குளத்திலிருந்து நீரை கொண்டு வருகின்ற வாய்காலில் நிரம்பிக்  காணப்படுகின்ற சல்வீனியா,பாசி, ஆற்றுவாழை போன்ற தாவரங்களால் நீரை உரிய வகையில் விவசாயக் காணிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் கடினமான இருப்பதாகவும் இதனால் விவசாயக் காணிகளுக்கு உரிய நேரத்துக்கு நீரைக் கொண்ட செல்ல முடியாமையினால் கூடுதலான காணிகள் நீரின்றி பாதிப்புக்குள்ளவதாகவும், இந்தப் போகத்தில் கதிர் வேளாமைக்;கு நீரின்றி கூடுதலான காணிகள் கதிர் பருவத்தில் கைவிடப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த விடயங்களை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அனோமா கமகே அவர்கள் இந்தப் போகத்துக்கான விவசாய செய்கை ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர்பாசன திணைக்கள இயந்திரங்களை கொண்டு வாய்க்கலிலுள்ள தாவரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு நீர்பாசன திணைக்கள அதிகாரிகளை பணித்தார். ஆத்துடன் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க இப்பிரதேச விவசாயிகள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் தனியாக அரசாங்கத்தை மட்டும் நம்பியிருக்காமல் ஆண்டாண்டு காலம் விவசாயத்தை செய்து வருகின்ற விவசாயிகளாகிய உங்களது  ஒத்துழைப்பும் தேவை எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பொறியியலாளர் திருமதி பிர்னாஸ், தொழில் நுட்ப உத்தியோகத்தர் சிவநாதன், விவசாயஅமைப்பின் செயலாளர்
எம்.ஐ.றஹீம் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்டவிதானைமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment