நிந்தவூர் கென்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் Faman Services (Pvt) Ltd நிறுவனத்தின் அனுசரணையில் "மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி" நிந்தவூர் அல்-மஸ்ஹர்பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று 08.03.2015 இடம்பெற்றது. அஷ் ஷெய்க் அல்-ஹாபிழ் ஏ.எம். அஸ்ஹர்(தப்லீகி) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வைத்தியர்களான Dr. SM. Shafraz , Dr. SBAM. Mujahith , Dr. MY. Nibras Mohamed . Dr. AA. Rikasa, Dr. R. Rayeesa Farwin  ஆகியோர் இதில் பிரதான வளவாளர்களாகப் பங்கு பற்றினர்.
இலங்கையில் அதிகமான பெண்கள் இதற்கு இலக்காகி அதிக மரணங்கள் சம்பவிப்பதாலும் முறையான அணுகுமுறைகள்மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்பதனாலும் இது தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான கையேடு ஒன்றும் இதில் வழங்கப்பட்டுள்ளதோடு கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எல்.நிசாமுதீன் அவர்களும்பங்குபற்றி சிறப்பித்தார்.
அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறுவேண்டுகோள் விடுத்தனர்.
ஈற்றில் நன்றியுரை கழக செயலாளர் S. Arouf Arshath அவர்களால் நிகழ்த்தப்பட்டு ஸலவாத்துடனும் இறைவனின்உதவியுடனும் நிகழ்ச்சி நிறைவுற்றதாக உதவி செயலாளர் சமீல் றசூல் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment