எம்.வை.அமீர்:
மருதமுனையின் மண்வாசனையை பிரதிபலிக்கும் வகையில், கல்வியா? காதலா? எனும் பெயரில் கவிஞர் இக்பால் கலைக்கழகத்தின் அனுசரணையுடன் தயாரிப்பாளர் முகம்மட் நளீம் (பாஹீம் ஜுவல்லரி) அவர்களின் தயாரிப்பில், பிரபல நாடக இயக்குணர் ஜீனாராஜ் (ஐ.எல்.ஏ.ஹூசைன்) அவர்களின் இயக்கத்தில் எதிர்வரும் 2015-04-03 ம் திகதி மருதமுனையை மையப்படுத்திய ஆவணத்திரைப்படம் ஒன்று திரையிடப்படவுள்ளதாக அப்படத்தின் ஏற்பாட்டாளர்களான, கவிஞர் இக்பால் கலைக்கழகத்தின் சார்பில் திரைப்படத்தின் உதவி இயக்குனர் எம்.எம்.எம்.முபீன் அவர்களது தலைமையில் 2015-03-14 ல் மருதமுனை கலாச்சாரமண்டபத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
மருதமுனையின் பொருளாதார ஏற்றத்தாழ்வை கல்வியினால் வெல்லும் தந்திரத்தையும் ஏற்படும் காதல் தரும் தடங்கல்களையும் மருதமுனையின் பாரம்பரிய தொழிலான நேசவுத்தொழில்,மீன்பிடி மற்றும் வியாபாரம் போன்ற அருகிவரும் தொழில் நிலையை மேன்படுத்த கல்வியை ஊடகமாக பயன்படுத்த தூண்டும் செய்திகள் சொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மருதமுனையில் மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களிலும் திரையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் இத்திரைப்படத்தின் ஊடாக கிடைக்கும் வருமானம் அனைத்தும் ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
நிகழ்வில் இயக்குனர் ஜீனாராஜ், உதவி இயக்குனர் எம்.எம்.எம்.முபீன், தயாரிப்பாளர் எஸ்.எல்.நழீம், இசையமைப்பாளர் யூ.ஜே.நாஸார், ஆகியோருடன் இத்திரைப்படத்தில் நடித்துள்ள ஏ.ஆர்.எம்.சாலிஹ், ஏ.ஆர்.ஏ.சத்தார், எம்.ஐ.ஏ.பரீட், எம்.ஏ.நஸீர், எம்.எச்..றபீக் ஆகியோரும் கலந்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பீ.எம்.எம்.ஏ.காதர் ஊடகத்துறைக்கு ஆற்றி வரும் பங்களிப்புக்காக பருத்தியாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கல்வியா? காதலா? எனும் திரைப்படத்தின் ஒருபகுதி பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment