(எம்.வை.அமீர்)
தற்போது சாய்ந்தமருது அல் ஹிலால்
வித்தியாலயத்தில் அதிபராக பணிபுரியும் ஆதம்பாவா முஜீன் அவர்கள் கடந்த 2015-03-17 ம் திகதி கல்முனை
மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து தீவு
முழுவதற்குமான சமாதன நீதிவனானார்.
உதுமான்கண்டு ஆதம்பாவா இஸ்மாயில் ஆமினாஉம்மா ஆகியோரின் அன்பு மகனான முஜீன் தனது ஆரம்பக்கல்வியை
அல் ஹிலால் வித்தியாலயத்திலும் அவரது இடைநிலைக் கல்வியை புத்தளம் சாஹிரா தேசிய
பாடசாலையிலும் பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பட்ட மேற்படிப்பை திறந்த
பல்கலைக்கழகத்திலும் பயின்றிருந்தார்.
தனது பதவிக்காலத்தில் கல்முனை சாஹிரா தேசிய
பாடசாலை மற்றும் மஹ்முத் மகளிர் கல்லூரி போன்றவற்றில் உதவி அதிபராகவும் தற்போது சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில்
அதிபராகவும் கடமையாற்றும் முஜீன், அஹ்மட் சஹாம் நதிக் மற்றும் பாத்திமா ஹம்சத் இமாஸா
ஆகியோரின் தந்தையுமாவார்.
சமூகசேவையில் தன்னை அர்ப்பணித்துள்ள முஜீன்
கல்விச்சமுகத்தை உருவாக்க பாடுபடுவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment