(சுலைமான் றாபி)
கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை கணக்காளர் சேவைக்கான உயர் போட்டிப் பரீட்சையில் நிந்தவூரைச் சேர்ந்த எஸ்.எம். ஹாரூன் சித்தியடைந்து அரச கணக்காளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் இப்பரீட்சையில் 329.5 புள்ளிகளைப் பெற்று சொந்த ஊரான நிந்தவூரிற்கு பெருமை சேர்த்ததோடு, கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவான ஒரே ஒரு நபர் என்கின்ற பெருமையையும் பெற்றுக்கொள்கின்றார்.
இப்றாலெவ்வை சரிபு, முஹம்மது அலியார் ஆசியா உம்மா ஆகியோர்களின் 06வது மகனான இவர் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி எஸ். சபீனா கஸ்ஸாலி அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தக் கணக்காளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டோர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் (02.05.2015) நாளை (சனிக்கிழமை) அலரி மாளிகையில் வைத்து வழங்கி வைக்கப்படவுள்ளதோடு, இச்சேவைக்கு வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 09 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment