நாட்டில் மிகவும் முக்கியமான பொதுத் தேர்தல் ஒன்றை மக்கள் சந்திக்கவுள்ளார்கள். நாடு முழுவதும் இருந்து 196 எம்பிக்களைத் தெரிவு செய்வதற்கான மிகவும் பலமான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 29 எம்.பி.க்கள் தேசியப்பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டு 225 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கான் தேர்தல் இதுவாகும்.
இதில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்படும் விடயம் என்னெவெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தோல்வி கண்ட முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் பிரதமர் பதவியை இலக்கு வைத்து குருநாகலை மாவட்டத்தில் போட்டியிடும் விடயமாகும்.
மேலும், இத்தேர்தல் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேரம் பேசும் சக்தியாக மாறக்கூடிய நிலையொன்று உருவாகவுள்ளது. அமையப்போகின்ற ஆட்சியில் தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக ஆட்சிப்பங்காளிகளாக உருவெடுக்கும் நிலை ஏற்படலாம்.
இதேவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகின்றது. ஆனாலும் ஏராளமான பணப்பட்டுவாடா சில இடங்களில் நடைபெற்றும் வருகின்றது.
போனஸ் ஆசனங்கள் இல்லாமல் ஐ.தே.கட்சி 93-95 இடங்களையும், ஐ.ம.சு.கூ. 74-76 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுவதோடு, போனஸ் ஆசனங்களுடன் த.தே. கூட்டமைப்பு 15-16 இடங்களையும், ஜே.வி.பி. 10-11 இடங்களையும், ‘பீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேககா 2 இடங்களையும் பெறலாம் என்றும் எதிர்பாக்கப்படுகின்றது.
மிகுதி ஆசனங்கள் சிறிய கட்சிகளுக்குக் கிடைக்கின்றது. மு.கா.சின் மரச்சின்னம் மற்றும் அ.இ.ம.காவின் மயில் சின்னம் போன்ற சிறிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெறும்.
இதில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்படும் விடயம் என்னெவெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தோல்வி கண்ட முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் பிரதமர் பதவியை இலக்கு வைத்து குருநாகலை மாவட்டத்தில் போட்டியிடும் விடயமாகும்.
மேலும், இத்தேர்தல் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேரம் பேசும் சக்தியாக மாறக்கூடிய நிலையொன்று உருவாகவுள்ளது. அமையப்போகின்ற ஆட்சியில் தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக ஆட்சிப்பங்காளிகளாக உருவெடுக்கும் நிலை ஏற்படலாம்.
இதேவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகின்றது. ஆனாலும் ஏராளமான பணப்பட்டுவாடா சில இடங்களில் நடைபெற்றும் வருகின்றது.
போனஸ் ஆசனங்கள் இல்லாமல் ஐ.தே.கட்சி 93-95 இடங்களையும், ஐ.ம.சு.கூ. 74-76 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுவதோடு, போனஸ் ஆசனங்களுடன் த.தே. கூட்டமைப்பு 15-16 இடங்களையும், ஜே.வி.பி. 10-11 இடங்களையும், ‘பீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேககா 2 இடங்களையும் பெறலாம் என்றும் எதிர்பாக்கப்படுகின்றது.
மிகுதி ஆசனங்கள் சிறிய கட்சிகளுக்குக் கிடைக்கின்றது. மு.கா.சின் மரச்சின்னம் மற்றும் அ.இ.ம.காவின் மயில் சின்னம் போன்ற சிறிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெறும்.
யாருக்கும் இத்தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கப்பெறாத காரணத்தால் தேர்தல் முடிந்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அமைப்பதற்கு ஆசைப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயகா ஆகியோருடன் மஹிந்தர் தொடர்பு கொண்டு ஆட்சி அமைப்பது சம்பந்தமாகவும், தனக்கு ஆதரவு வழங்க வேண்டியும் பேசவுள்ளதாக ஒரு இரகசியத் தகவல் தெரிவிக்கின்றது. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்தவொரு நிலையிலும் மஹிந்தருக்கு ஆதரவளிக்காது என்பது மட்டும் உண்மை.
அம்பாரை மாவட்டம்
எதிர்பார்க்கப்படும் செல்லுபடியான வாக்குகள் 340,000. ஒரு எம்.பி.க்குத் தேவையாகும் ஆகக் குறைந்த வாக்குகள் சுமார் 57,000. இம்மாவட்டம் 07 எம்பிக்கள் கொண்டது. அந்த வகையில் ஐ.தே.க. ஆகக் கூடுதலாக 115,000 வாக்குகள் பெறலாம். காரணம் அம்பாரையில் முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகின்றது. ஐ.மு.சு.கூ. 105,000 வாக்குகள் பெறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 54,000 வாக்குகளும், அ.இ.ம. காங்கிரஸ் (மயில் சின்னம்) 34,000 வாக்குகளையும் பெறும் நிலையுள்ளது.
ஐ.தே.க – 03, ஐ.மு.சு.கூ – 02, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 01, அ.இ.ம.கா – 01 பெறும் நிலை உள்ளது. மயில் சின்னத்திற்கு வாக்களிப்பு வீதம் குறையுமானால் அத்துடன் 05 வீத வெட்டுப்புள்ளியில் பாதிப்பு வருமனால் ஐ.தே.க. 4 ஆசனம் பெறும். ஆனால் அம்பாரை மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் வேட்பாளர்களிடத்தில் அதிகளவு மனாப்பை போட்டியுள்ளதால் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களிடத்தில் பாரிய சிக்கல் உள்ளது.
இதேவேளை ஐ.தே.கட்சிக்கு அளிக்கப்படும் வாக்கு வீதம் குறைவடைந்து, வெற்றிலைச் சின்னத்திற்கு சுமார் 8,000 வாக்குகள் அதிகரிப்பதுடன், மயில் சின்னத்திற்கும் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்குமானால், ஐ.ம.சு. கூட்டமைப்பு இம்மாவட்டத்திற்கான போனஸ் ஆசனத்தைக் கைப்பற்றக்கூடிய ஏது நிலையும் உள்ளது.
இங்கு சராசரியாக 70 வீதமான வாக்களிப்பை எதிர்பார்க்கலாம். அதிலும் விசேடமாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் 70 வீதமான வாக்களிப்பை காணலாம். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் 56 வீதமான வாக்களிப்புதான் நடைபெறலாம். அம்பாரை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பாக தயாகமகே, தயாரட்ன ஆகியோரும் வெற்றிலை சார்பாக அதாவுல்லாவும், விமலவீர திசாநாயகவும் வெற்றியடையும் நிலையுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம்
எதிர்பார்க்ப்படும் செல்லுபடியான வாக்குகள் 240,000 ஆகும். ஒரு எம்.பி.க்கு ஆகக் குறைந்தது சுமார் 60,000 வாக்குகள் தேவைப்படும். இம்மாவட்டம் 05 எம்.பி.க்களைக் கொண்டது.
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகக் கூடுதலாக 135,000 ஆயிரம் வாக்குகளைப் பெறலாம். ஐ.தே.க. 32,000 வாக்குகளும், ஐ.ம.சு.கூ. 30,000 வாக்குகளும், மு.கா. 23,000 வாக்குகளும், சுயேட்சைக் குழுக்கள் சுமார் 20,000 வாக்குகளையும் பெறலம்.
காரணம் இலங்கையில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. காரணம் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதற வைக்க, வாக்குப் பதிவை மந்தமாக்க, வாக்குச் சிதறலை உருவாக்க, தமிழ் வாக்குகளைப் பிரிக்க, தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க என 30 சுயேட்சக் குழுக்கள் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
இதன் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சொந்தமான சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை இந்த சுயேட்சைக் குழுக்கள் பிரிக்கின்றன. அதனால் தமிழ் கூட்டமைப்பு மட்டக்களப்பில் தனது ஒரு எம்.பி. ஆசனத்தை இழக்கின்றது. மற்றும் ஐ.தே.க. மற்றும் மஹிந்தர் அணி கொண்ட வெற்றிலைச் சின்னம் (ஐ.ம.சு.கூ) ஆகிய இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் சுமார் 15 ஆயிரம் தமிழ் வாக்குகளைப் பிரிக்கின்றன. இங்கு பிரதான கட்சிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. மற்றும் மஹிந்தர் அணி கொண்ட ஐ.ம.சு.கூ ஆகிய கட்சிகள் தனித்தனியாக மோதுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 150,000க்கும் அதிகமான வாக்குகள் பெறுமானால் கூட்டமைப்பு 4 எம்பிக்களைப் பெறலாம். அவ்வாறில்லாதபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03, ஐ.தே.க. – 01, ஐ.ம.சு.கூ – 01 என்ற ரீதியிலேயே ஆசனங்களைப் பெறும் நிலையுள்ளது.
இங்கும் அம்பாரை போன்று முஸ்லிம் பகுதிகளில் 67 வீதமான வாக்களிப்பையும், தமிழ் பகுதிகளில் 57 வீதமான வாக்களிப்பையும் எதிர்பார்க்கலாம்.
மட்டக்களப்பில் கூட்டமைப்பு சார்பாக பொன்.செல்வராஜா மற்றும் புதிய வேட்பாளரான ஓய்வு பெற்ற கல்வியதிகாரி ஸ்ரீ.நேசன் ஆகியோருடன் இன்னுமொருவரும், வெற்றிலை சார்பாக ஹிஸ்புல்லாவும், ஐ.தே.க. சார்பாக அமீர்அலியும் வெற்றியடையும் நிலையுள்ளது.
பிள்ளயானுக்கு மஹிந்தர் சார்பாக தேசியப்பட்டியல் எம்.பி. வழங்கப்படவுள்ளது. வெற்றிலையில் ஹிஸ்புல்லா வெற்றியடையவில்லை என்றால் மு.கா சார்பாக அலிஸாஹீர் மௌலானா வெற்றி பெறலாம்.
திருகோணமலை மாவட்டம்
எதிர்பார்க்கப்படும் செல்லுபடியான வாக்குகள் 175,000. ஒரு எம்பிக்குத் தேவையாகும் ஆகக் குறைந்த வாக்குகளாக சுமார் 58,000 வாக்குகள் தேவைப்படும். இந்த மாவட்டம் 04 எம்.பி.க்கள் கொண்டது.
இங்கு ஐ.தே.கட்சியும், மு.கா.கட்சியும் இணைந்து யானைச் சின்னத்தில் போடட்டியிடுகின்றன. மற்றும் பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஐ.ம.சு.கூ. ஆகியனவும் போட்டியிடுகின்றன.
அந்த வகையில் ஐ.தே.க. ஆகக் கூடுதலாக 70,000 வாக்குகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகக்கூடுதலாக 51,000 ஆயிரம் வாக்குகளும், ஐ.மு.சு.கூ. 40,000 வாக்குகள் பெறலாம். ஜே.வி.பி. கிண்ணியா ஒட்டகம், சரத் பொன்சேகா மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 13,000 வாக்குகள் பெறலாம்.
இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மஹிந்தவின் ஐ.ம.சு.கூ. கட்சியும் தங்களின் வாக்கு வீதத்தை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படியான நிலை உருவானால் ஐ.தே.க.யின் 70,000 என்ற வாக்கு அதிகரிக்கலாம். அதாவது இங்கு எதிர்பாhக்கப்படும் செல்லுபடியான 175.000 வாக்குகள் என்பது, 180,000 என்று அமையுமானால் ஐ.தே.க. மற்றும் வெற்றிலைக்கான வாக்குகள் சற்று அதிகரிக்கலாம். இந்த அதிகரிப்பு என்பது 3 பிரதான கட்சிகளுக்கும் தலா 1000 வாக்குகள் வீதம் அதிகரிக்கலாம்.
ஐ.தே.க. – 1101ஸ்ரீ2, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 1, ஐ.ம.சு.கூ. – 1 என்ற ரீதியில் எம்பிக்களைப் பெறுகின்றது. இங்கு கொள்கை ரீதியாக தமிழ் முஸ்லிம் இன உறவை முன்நோக்கி முஸ்லிம் மக்களின் 8000 வாக்குகள் தமிழ் கூட்டமைப்புக்கு கிடைக்குமானால் கூட்டமைப்பு 2 எம்பியைப் பெறலாம். அதற்கான நல்ல அருமையான வாய்ப்பொன்று மூதூரில் இருந்து வந்த போதும், அந்த வாய்ப்பு கை நழுவிப் போய் விட்டது.
இங்கு வாக்களிப்பு வீதம் குறையுமனால் ஐ.தே.க.யின் 70,000 வாக்குகள் என்பது சற்றுக் குறையலாம். அதேபோன்று தமிழ் கூட்டமைப்பின் 52,000 வாக்குகளும் சற்றுக் குறையலாம். மற்றும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் 40,000 வாக்குகள் இன்னும் 2000 வாக்குளாக அதிகரிக்கலாம். காரணம் திருகோணமலை, கந்தளாய், சேருவில ஆகிய பகுதிச் சிங்கள மக்களின் மஹிந்தவுக்கான ஆதரவு இன்னும் குறையவில்லை.
இங்கு 70 வீதமான முஸ்லிம் மக்களின் வாக்களிப்பையும், 52 வீதமான தமிழ் மக்களின் வாக்குப் பதிவையும் எதிர்பார்க்கலாம். எப்பொழுதும் தமிழ் பகுதிகளில் எந்தத் தேர்தல் நடந்தாலும் வாக்களிப்பு வீதம் என்பது சற்று மந்த நிலையில் காணப்படுவது வழமையான செயல்தான்.
திருமலையில் கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன், வெற்றிலை சார்பாக சுசந்த புஞ்சிநிலமேவும், யானையில் போட்டியிடும் கிண்ணியா சின்ன மஹ்றூபும் வெற்றி பெறும் நிலையுள்ளது. யானை சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஐ.தே.க வேட்பாளர் இம்ரான், மு.கா வேட்பாளர் தௌபீக் ஆகிய இருவருக்கும் கடும் மனாப்பை போட்டி இடம்பெறும். இருவரில் ஒருவர் இரண்டாவது ஆசனத்தை பெற்று வெற்றி பெறுவார். இங்கு வெற்றி என்பது பெரிய இடைவெளி இல்லாது சுமார் 1000 – 2000 மனாப்பை வித்தியாசத்தில்தான் போட்டியும், வெற்றியும் அமையும்.
வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களைக் கொண்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 எம்பிக்களும், வன்னி வாவட்டத்தில் 6 எம்பிக்களுமாக 13 எம்பிக்கள் கொண்டது. இதில் முஸ்லிம் எம்பி என்று 1 அல்லது 2, மற்றும் தமிழ் கூட்டமைப்பு இல்லாத ஆசனம் என்று ஆகக் கூடியது 2 ஆசனம் போக, 9-10 எம்பிக்கள் தமிழ் கூட்டமைப்பு சார்பாக கிடைக்கலாம். கிழக்கில் 5 ஆசனங்கள் கிடைக்கும்.
கிழக்கில் திருகோணமலை-1, மட்டக்களப்பு-3, அம்பாரை-1 அடங்கலாக 5 ஆசனங்கள்தான் கிடைக்கும். மற்றும் கூட்டமைப்பின் வட கிழக்கு தழுவிய தேசியப் பட்டில் – 1. (இதில் தமிழ் மக்களின் வாக்குகள் அதிகரிக்குமானால் 2 எம்பி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.) அப்படியான ஒரு வாய்ப்பு 2004 ஆம் ஆண்டு வந்தது. மொத்தமாக 15-16 எம்பிக்களைப் பெற்ற மூன்றாவது சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமையும். அமையப் போகின்ற நாடாளுமன்றத்தில் தமிழ் கூட்டமைப்பு ஒரு பேரம் பேசுகின்ற சக்தியாக ஆட்சிப் பங்காளியாக மாறக் கூடிய மிக அதிக வாய்ப்புள்ளது.
சிலவேளை ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்கு ஜே.வி.பி, அல்லது கூட்டமைப்பின் ஆதரவு அல்லது இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவும் தேவைப்படலாம். ஆட்சிக்கு தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டால் அமையப்போகின்ற அரசுக்கு வெளியில் இருந்து கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படலாம்.
இந்தப் பொதுத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்புக்கு ஒரு சிறிய தீர்வையாவது பெற்றுத் தரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
(எம்.எம்.நிலாம்டீன்- mmnilamuk@gmail.com)

0 comments:
Post a Comment