கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி முதலாம் இலக்க வேட்பாளர் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை (13) நண்பகல் அக்குரணை நகரில் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அஸ்னா பெரிய பள்ளிவாசலுக்கும் அவர் தொழுகைக்குச் சென்றார். முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஷாபி ஹாஜியார், அக்குரணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.மிஹ்லார், அமைச்சரின் இணைப்பாளர்களான சலிம்தீன், நசீம், ரியாஸ் ஆகியோர் உட்பட ஆதரவாளர்கள் அநேகர் அவருடன் சென்றனர். வியாபாரிகள் அவரை புன்முறுவலுடன் வரவேற்றனர்.
அவர் சக வேட்பாளர் எம்.எச்.ஏ.ஹலீமின் தேர்தல் அலுவலகத்திற்கும் சென்று அங்கு இருந்தவர்களுடன் அளவளாவினார்.




0 comments:
Post a Comment