நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில்
பாராளுமன்றத்துக்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்து 15 அரசியல் பிரதிநிதிகள்
மக்களினால் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் , அதை விடவும் அரசியல் கட்சிகளின்
தேசிய பட்டியலின் ஊடாக தற்போது வரை 6
நபர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. அதில் மக்களினால்
நிராகரிக்கப்பட்டவர் ஒருவரின் பெயரும் உள்ளடங்கும். அறிவிக்கப்பட்டுள்ள
தேசியப் பட்டியல் இறுதி செய்யபட்டால் மொத்தமாக பாராளுமன்றத்துக்கு
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களுடன் கட்சிகளினால் தெரிவு
செய்யப்பட்ட 6 நபர்களையும் சேர்த்து 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் எனற
எண்ணிக்கையும் அடையும் என்பது குறிபிடத்தக்கது ,
முஸ்லிம் சமூகம் எத்தனை அரசியல்
பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றது என்பது முக்கிமானது
என்பதை விடவும் அந்த அரசியல் பிரதிநிதிகள் தம்மை தெரிவு செய்த மக்களுக்காக
எவ்வளவு விசுவாசமாகவும் உண்மையாகவும் அவர்களின் உரிமைகளுக்காக போராடப்
போகின்றார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்,
முஸ்லிம் சமூகம் கடந்த பாராளுமன்றத்தில் ,
சமூக உணர்வற்ற சடங்களையும் , அரசியல் வியாபாரிகளையும் , ஏன் சமூகத்தை
காட்டிகொடுத்து அரசியல் வியாபாரம் செய்த தூரோகிகளையும் பிரதேசவாதிகளையும்
கூட சந்தித்தது என்பது என்றும் மறக்க முடியாத அனுபவங்களாகும்.
21 முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் சமூகத்தை விற்றுப்பிழைக்கும் துரோகிகளாக இல்லாதிருக்க பிராத்திப்போம் !!!
1. அமைச்சர் ரவூப் ஹகீம்
2. அமைச்சர் ரிஷாத்
3.அமைச்சர் கபிர் காசிம்
4.முஜீபுர் ரஹ்மான்,
5 .அமைச்சர்அப்துல் ஹலீம்
6. ஹரீஸ்
7. பைஸல் காசிம்
8, அலி சாஹிர் மௌலானா
9, அமீரலி
10.- மன்சூர்
11. கே.கே.மஸ்தான்
12.இஸ்ஹாக்
13., சின்ன மஃரூப்
14. இம்ரான் மஃரூப்
15, மரிக்கார்
2. அமைச்சர் ரிஷாத்
3.அமைச்சர் கபிர் காசிம்
4.முஜீபுர் ரஹ்மான்,
5 .அமைச்சர்அப்துல் ஹலீம்
6. ஹரீஸ்
7. பைஸல் காசிம்
8, அலி சாஹிர் மௌலானா
9, அமீரலி
10.- மன்சூர்
11. கே.கே.மஸ்தான்
12.இஸ்ஹாக்
13., சின்ன மஃரூப்
14. இம்ரான் மஃரூப்
15, மரிக்கார்
தேசியப் பட்டியல்
16, சல்மான்
17. ஹபீஸ்
18.நவவி
19, பௌசி
20. பைசர் முஸ்தபா
21. ஹிஸ்புல்லா
17. ஹபீஸ்
18.நவவி
19, பௌசி
20. பைசர் முஸ்தபா
21. ஹிஸ்புல்லா

0 comments:
Post a Comment