• Latest News

    August 21, 2015

    தலைவர் ரிசாதின் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை பொய் என்கிறார் : வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான்

    (எஸ்.அஷ்ரப்கான்)
    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 10 வேட்பாளர்களும் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டதாக பூமுதீன் என்பவரினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு 7 ஆம் இலக்க வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் மறுப்பு தெரிவிப்பு

    புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு அம்பாரை மாவட்டத்தின் 10 வேட்பாளர்களுடனும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துரையாடியதாகவும் அதற்கு நாங்கள் 10 பேரும் சம்மதம் தெரிவித்ததாகவும் பூமுதீன் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடு்டுள்ளார். இது முழுக்க முழுக்க பொய்யாகும்.

    முதலாவது 10 வேட்பாளர்களும் கூட்டாக எந்த அறிக்கையையும் விடவில்லை. இரண்டாவது அமைச்சர் றிஷாட் பதியுதின் புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் வழங்கவது தொடர்பாக என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. அதேநேரம் நான் அறிந்தவரையில் வேறு வேட்பாளர்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. நாம் அதற்கு சம்மதம் தெரிவிக்கவுமில்லை.

    அம்பாரை மாவட்டத்தில் 33 ஆயிரம் வாக்குகள் வழங்கிய மக்களை அநாதைகளாக தவிக்க விட்டு புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் வழங்கவதற்கு சம்மதம் தெரிவிக்கும் அளவு நானோ அல்லத நான் அறிந்தவரையில் எனது சக வேட்பாளர்களோ வங்குரோத்து நிலையில் இல்லை. அதே நேரம், கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் மீது திட்டமிட்டு யாருடையதோ துாண்டுதலின் பேரில் அவர் கடந்த தேர்தலில்  பெரிதாக வேலை செய்யவில்லை என்றும் தேர்தல் தினத்தன்று 4 மணிக்கே கொழும்பு திரும்பிவிட்டார். என்றும் அவர் தெரிவித்திருப்பது அப்பட்டமான பொய்யும், முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முனைவதுமாகும்.

    செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் இத்தேர்தலில் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்தார் என்பது எனக்கு மாத்திரமல்ல அம்பாரை மாவட்டத்திலுள்ள அத்தனை கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தெரிந்த விடயமாகும். அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடந்து 2 நாட்களுக்குப் பின்னர்தான் கொழும்புக்கு அவர் சென்றார் என்பது நான் மட்டுமல்ல கட்சியில் இருக்கின்ற பலருக்கும் தெரிந்த விடயமாகும்.

    எனவே, யாரையாவது திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான சின்னத்தனமான அறிக்கைகளை விடுவதை பூமுதீன் அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிப்பதோடு, இவ்வாறான அசிங்கமான பொய் அறிக்கைகளுக்கு வேட்பாளர்களையும் துணைக்கு அழைப்பதை கண்டிக்கின்றேன். என்று தேர்தலில் 7 ஆம் இலக்கத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைவர் ரிசாதின் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை பொய் என்கிறார் : வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top