• Latest News

    August 15, 2015

    பொதுத் தேர்தல் பற்றி முறைப்பாடுகளை 2343 SMS செய்யுங்கள்: தேர்தல் ஆணையாளர்

    நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது ஏற்படும் தேர்தல் சம்பந்தமான பிரச்சினைகளை, நேரடியாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வழிமுறையொன்றை, தேர்தல்கள் ஆணையாளர் இன்று சனிக்கிழமை (15) அறிமுகம் செய்துள்ளார்.

    இதன்பிரகாரம், தேர்தல் வாக்களிப்பின் போது வாக்காளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அதனை குறுந்தகவல் மூலம் முறைப்பாடு செய்யமுடியும்.

    குறுந்தகவல் தட்டச்சி செய்யும் இடத்தில், EC இடைவெளி EV இடைவெளி மாவட்டம் இடைவெளி முறைப்பாடு என்ற வரிசையில் தட்டச்சி செய்து 2343  என்ற இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறும் வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    எந்தவொரு மொழி மூலமும் இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளமுடியும் என்றும் இந்த முறைமையானது இன்றிலிருந்து ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வரை செயற்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுத் தேர்தல் பற்றி முறைப்பாடுகளை 2343 SMS செய்யுங்கள்: தேர்தல் ஆணையாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top