ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில்
விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பிரதமராக
பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
அதன் பின்னர், அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 24ம் திகதி பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போன்றன தேசியப் பட்டியல் ஊறுப்பினர்களின் பெயர் விபரங்களை அறிவித்துள்ளது.
அனைத்து தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்டு
தெரிவான உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில்
வெளியிடப்பட்டதன் பின்னர், அமைச்சரவைப் பதவிப் பிரமாணம் நடைபெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு
நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான
லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் பற்றி பேசப்பட்டு வருகின்றது. அமைச்சர்களின் எண்ணிக்கை
குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் கொழும்பு
ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்

0 comments:
Post a Comment