ஐக்கிய
தேசியக் கட்சியுடன் இணைந்து அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்திற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின்
கட்சி அங்கத்துவம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய செயற்குழுவில் குமார் வெல்கம, டளஸ் அழகபெரும, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தேசிய அரசாங்கம் சம்பந்தமாக செயற்பட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என குமார் வெல்கம உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment