• Latest News

    August 15, 2015

    நான் ஒருபோதும் வஸீம் தாஜூதீனை அறிந்திருக்கவில்லை: யோசித்த ராஜபக்ஷ காதலி

    பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பாக பல விடயங்கள் பேசப் பட்டாலும் காதல் முரண்பாட்டினால் தான் தாஜூதீன் கொலை செய்யப்பட்டார். அதாவது யோசித்த ராஜபக்ஷ காதலித்து வந்த பெண் யசாரா அபேநாயக்கவும்  தாஜூதீனும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது நட்பில் ஏற்பட்ட சந்தேகத்திலேயே தாஜூதீன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
    மேலும் யசாரா அபேநாயக்க என்ற யோசிதவின் முன்னாள் காதலி தாஜூதீன் கொலை தொடர்பாக தனது நண்பியிடம் கூறிய விடயம் அதேபோல் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட முறை தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் யசாரவிடம் இதுபற்றி வினவியபோது அவர் பல விடயங்களை தெரிவித்தார்.
    நான் ஒருபோதும் வஸீம் தாஜூதீனை அறிந்திருக்கவில்லை. வஸீம் தாஜூதீனோடு தொடர்புபடுத்தி நான் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் வெறும் வதந்திகளே.இந்த வதந்தியை 2012 ஆம் ஆண்டு லங்கா லீக்ஸ் என்ற இணைய தளமே ஆரம்பித்தது. அந்த செய்தி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஏன் இந்த சம்பவத்துடன் என்னை தொடர்புபடுத்துகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் அவுஸ்திரேலியாவுக்கான துாதராக கடமை புரிந்ததற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு யசார பதலளிக்கும்போது தாஜூதீனின் கொலை இடம்பெற்றது 2012 ம் ஆண்டாகும். அனால் நான் பணியாற்றியது 2014 ம் ஆண்டிலாகும் என தெரிவித்தார்.
    மேலும் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த யசாரா என்கும் யோசித்தவிற்கும் இடையில் திருமணம் செய்து கொள்ளும் அளவிலான நிச்சயித்த உறவு இருந்தது அது தனிப்பட்ட எங்களின் பிரச்சினை மற்றும் யோசிதவின் குடும்ப ரீதியிலான முரண்பாடுகள் எங்கள் பிரிவிற்கு காரணமாக அமைந்தது . ஆனால் தற்போது பேசப்படுவது போன்று எனக்கும் தாஜூதீனுக்கும் இடையிலான தெடர்பு அல்ல.
    இந்த செய்திகள் வெளிவந்த நேரத்தில் அதற்கான மறுப்பறிக்கையினை வெளியிட நினைத்தபோது கட்டுக்கதைக்கு மறுப்பறிக்கை கொடுத்து உயிர் கொடுக்கவேண்டாம். இதை கவனத்தில் எடுக்க வேண்டாம் என என்னை சார்ந்தவர்கள் அறிவுரை வழங்கினார்கள். ஓய்ந்திருந்த இந்த செய்தியானது தேர்தல் காலமென்பதால் மீண்டும் உயிர் பெற்று நடமாடுகிறது. இந்த செய்தியினால் நானும் எனது குடும்பமும் அதிகமான அசௌகரியங்களை எதிர் கொண்டிருக்கிறோம். தாஜூதீன் சம்பந்தமான அறிக்கை வெளிவந்தவுடன் உண்மை புரியும் .மக்கள் இவ்வாரான போலியான இணையதள செய்திக்கு முன்னுரிமை வழங்க வேண்டாம் எனவும் யசார அபேநாயக்க தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான் ஒருபோதும் வஸீம் தாஜூதீனை அறிந்திருக்கவில்லை: யோசித்த ராஜபக்ஷ காதலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top