• Latest News

    August 15, 2015

    ரவூப் ஹக்கீம் கண்டி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையுடன் கலந்துரையாடல்

    பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில்நேற்று (14.08.2015) காலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி உமர்தீன் தலைமையில் அவ்அமைப்பின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

    இஸ்லாத்தின் விழுமியங்களையும், கலாசாரத்தையும் பேணிப்பாதுகாப்பதற்கு ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரிடம் விளக்கிக்கூறப்பட்டது. குறிப்பாக இளவயதியினர் மத்தியிலும், மாணவர், மாணவியர் மத்தியிலும் ஒழுக்க மாண்புகளை ஊக்குவிப்பதன் அவசியம் பற்றியும் அந்த விடயத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் பங்களிப்புப் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

    நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவரும் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்களுக்கான ஓய்வுதியத்திட்டத்தின் அவசியம் மற்றும் முன்னர் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட அடையாள அட்டை வழங்கள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.

    இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்திலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அமைச்சர் முன்னெடுத்த பயனுள்ள செயல்பாடுகள் பற்றியும் சிலாகித்து கூறப்பட்டது. அவற்றை அரபு நாட்டுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளித்து பிரசுரித்தமை பற்றியும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

    கண்டியில் தற்பொழுது இயங்கிவரும் ஜம்இய்யதுல் உலமா அலுவலகம் சகல வசதிகளுடனும் கூடிய சொந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளமை பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

    பொதுவாக இலங்கை முஸ்லிம்களும் குறிப்பாக கண்டி மாவட்ட முஸ்லிம்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
    அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், சன்மார்க்க கல்வியோடு கூடியதாக உலக கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து ஜம்இய்யதுல் உலமா முன்னெடுத்துவரும் செயல்திட்டங்கள் குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன் உலமா சபை அறிமுகப்படுத்தியுள்ள மக்தப் முறைமை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

    ஜம்இய்யதுல் உலமாவின் முயற்சிகளுக்கு தாமும் சக அமைச்சர் ஹலீமும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

    கலந்துரையாடலின் இறுதியில் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரவூப் ஹக்கீம் கண்டி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையுடன் கலந்துரையாடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top