ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்
பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில்
செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த உடன்படிக்கையில்
கையெழுத்திட்டனர்.
இலங்கையின் 16வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி இணைந்து தேசிய அரசாங்கம்
அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை சற்று முன்னர்
கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பிரதமரின் பதவிப்பிரமாண நிகழ்வின்
பின்னர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதன் புதிய பொதுச் செயலாளர்
துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன்
பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோர் உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டுள்ளனர்.
வைபவத்தின் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். இரு கட்சிகளையும்
சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளின் முன்னால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு,
பரிமாறிக் கொள்ளப்பட்டது.
குறைந்த பட்சம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இருகட்சிகளும் இணைந்து
தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணக்கம்
காணப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் பிறந்துள்ளது.




0 comments:
Post a Comment