• Latest News

    August 21, 2015

    சுதந்திரக் கட்சியின் விலகலால் ஐ.ம.சு.முன்னணி கலைந்தது

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியுள்ள நிலையில், அந்த முன்னணி கலைந்துள்ளது.
     
    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த மிகப் பெரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் உடன்படிக்கையை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. 

    இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கலைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். 

    இந்த நிலையில், தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தனித்து விடப்பட்டுள்ளன. 

    எவ்வாறாயினும் இந்த கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்தில் செயற்படும் என கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுதந்திரக் கட்சியின் விலகலால் ஐ.ம.சு.முன்னணி கலைந்தது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top