முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒத்துக்கொள்வதாக
இன்று AFP செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார் , எனது பிரதமர் கனவு
கலைந்து விட்டது , என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார் ,ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக செயல்படப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
22 மாவட்டங்களில் நாங்கள் எட்டு மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளோம் ஐக்கிய தேசிய கட்சி 11
மாவட்டங்களை பெற்றுள்ளது இதன் பொருள் நாங்கள் நாங்கள் தோற்று விட்டோம்
,இது ஓர் சிரமான சண்டையாக இருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேவேளை
ஏனைய மூன்று மாவட்டங்களும் தமிழ் சிறுபான்மையினர் வாழும் மாவட்டங்கள் என
தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தாக அந்த தகவல் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளரின் இறுதி அறிவிப்புக்கு
முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமிப்பின் தோல்வியை மஹிந்த ராஜபக்ஷ
ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த தகவல் மேலும் தெரிவித்துள்ளது

0 comments:
Post a Comment